கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்
Google Buzz Logo

சரியாத்தான் பாடி வச்சிருக்காங்க.. எப்படின்னு கேக்கறீங்களா? கீழ இருக்க படத்துல இருக்குற + ஐ கொஞ்ச நேரம் உத்துப் பாருங்க, அதை சுத்தித் தெரியற வெளிர்சிகப்பு வட்டங்கள் மறைஞ்சி சுத்திக்கிட்டிருக்கிற பச்சை வட்டம் ஒன்னு தெரியும்..




ஏன்னு யாராவது அறிவியல் பூர்வமா விளக்க முடியுமா?

(பாண்டிய மாமன்னருக்கு ஒரு மாபெரும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது, அதை தீர்த்து வைக்கும் சரியான பாட்டெழுதும் புலவருக்கு... ஹி. ஹி. ப்ருந்தாவனத்தில் ஒரு பின்னூட்டம் பரிசாய் அளிக்கப்படும் :-P )

19 கருத்து(க்கள்):

பெயரில்லா |

மணிக்கு அல்வாசிட்டி.விஜய் சொன்னது...

கோபி கண்ணு, இதுக்கு பேரு Optical illusion-ன்னு சொல்லுவாங்க. கூகிளி பாருங்க 4500 படம் கொட்டுது.

http://images.google.com/images?q=Optical+illusion&hl=en&lr=&sa=N&tab=ii&oi=imagest


பெயரில்லா |

மணிக்கு Positive RAMA சொன்னது...

அல்வாசிட்டி விஜய் சொல்ல வந்ததான் நானும் சொல்ல வந்தேன் கோபி! ஆமா! உங்களோட மனசு சம்பந்தமான தொடரை தொடருங்கோ..


பெயரில்லா |

மணிக்கு மூர்த்தி சொன்னது...

கோபி,

ஆமாம். விஜய் சொல்வதுதான் சரி. ஆப்டிகல் இல்யூசன் அது.


பெயரில்லா |

மணிக்கு கோபி சொன்னது...

விஜய்,மூர்த்தி,பாசிட்டிவ் ராமா,

சரிங்க.. பச்சைக் கலர் ஏன் வந்ததுன்னு கொஞ்சம் யாராவது விரிவாச் சொல்லுங்களேன்.

பாசிட்டிவ் ராமா,

"மனமென்னும் மாயாஜாலம்" தொடரை (நம்பிக்கை - கூகுள் குழுமத்தில்) விரைவில் தொடர முயற்சிக்கிறேன்..


பெயரில்லா |

மணிக்கு அல்வாசிட்டி.விஜய் சொன்னது...

//சரிங்க.. பச்சைக் கலர் ஏன் வந்ததுன்னு கொஞ்சம் யாராவது விரிவாச் சொல்லுங்களேன்.//

இது என்னய்யா வம்பா இருக்கு? சுத்துறது பச்சை நிறம் தான். கண்ணின் சாதாரண நிலைத்தன்மையை விட அது வேகமா சுத்துகிறது. கண்கள் அலைபாய்ந்துக் கொண்டிருக்கும் போது தெரியல. அதை அப்படியே கொஞ்சம் ஒரிடத்தில் persist பண்ணி வைத்தால் நமது கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. அதுக்கு தான்யா அதுக்கு பேரு இல்லியூசன்ஸ். கிடைக்கிற மாதிரி இருக்கும் ஆன கிடைக்காது. கிடைக்காத மாதிரி இருக்கும் ஆன கிடைச்சிரும்.

//"மனமென்னும் மாயாஜாலம்" தொடரை (நம்பிக்கை - கூகுள் குழுமத்தில்) விரைவில் தொடர முயற்சிக்கிறேன்.. //

கல்யாணம் பண்ணிக்க போற நேரத்திலேயா... நடத்து ராசா நடத்து. இப்போ எல்லாமே மாயஜாலமாதாண்டே இருக்கும்.


பெயரில்லா |

மணிக்கு கோபி சொன்னது...

ஐயோடா! படத்துல பச்சை கலரே இல்லீங்க(வேனுமானா படத்தை எடிட்டர்ல தொறந்து பாருங்க).

ஒவ்வொரு வெளிர்சிவப்பு வட்டமும் மறைஞ்சி தெரியும் போது வட்டம் சுத்தற மாதிரி தெரியுது..

என் சந்தேகம் என்னான்னா.. படத்துல எங்கயுமே இல்லாத பச்சை கலர் எங்கயிருந்து வருதுன்னுதான்...(பச்சைக்கும் வெளிர்சிகப்புக்கும் எதுனா தொடர்பிருக்குமோ)


பெயரில்லா |

மணிக்கு அல்வாசிட்டி.விஜய் சொன்னது...

கல்யாணம் பண்ணிக்க போற புள்ள ரொம்ப ஆராய்ச்சி பண்ணாதீங்க. லைட்டா இருங்க. லைட்டரா இருக்காதீங்க

(ஹீ ஹீ திடீர்ன்னு பொன்மொழி வந்திச்சி அது தான் உதிர்த்துட்டேன்)


பெயரில்லா |

மணிக்கு Positive RAMA சொன்னது...

ஆங்! கோபி சொல்றது நியாயம் தானே! பச்சை கலரு தனியே பார்த்தா இல்லீயே! கோபி இந்தமாதிரி விடையை தெரிங்சுக்கிட்டு விளையாடக்கூடாது..சட்டுன்னு பதில சொல்லுங்கோ..ஆமா!


பெயரில்லா |

மணிக்கு கோபி சொன்னது...

//கல்யாணம் பண்ணிக்க போற புள்ள ரொம்ப ஆராய்ச்சி பண்ணாதீங்க. லைட்டா இருங்க. லைட்டரா இருக்காதீங்க//

ஆராய்ச்சியெல்லாம் இப்பவே பண்ணிட்டாதானுங்க.. கல்யாணத்துக்கப்றம் எங்க...

பாசிட்டிவ் ராமா,

நிஜமாவே எனக்கும் புரியலைங்க.. ஒருவேளை வெளிர்சிவப்பின் எதிர்நிறம் பச்சையோ... யாராவது அறிவியலாலர்கள்.. கண் மருத்துவர்கள் சொன்னாத்தான் தெரியும்...


பெயரில்லா |

மணிக்கு Dondu சொன்னது...

test


பெயரில்லா |

மணிக்கு மாயவரத்தான்... சொன்னது...

இப்போ 'பச்சை' கலரோட ஆட்சி... அதனால இப்படி தான் பச்சை கலர் தெரியுதாம். அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இதே படத்தை பார்த்தப்போ 'மஞ்சள்' கலர் தெரிஞ்சுச்சாம். இன்னும் அஞ்சு வருஷத்துக்கு பச்சை தான் தெரியுமுன்னு ஒரு 'பட்சி' சொல்லுது. அதுவும் போன மாசம் ரெண்டு ஊரிலே ரிசல்ட் தெரிஞ்சதிலே இருந்து பச்சை கலர் இன்னும் வேகமா சுத்துதுன்னும் கேள்வி. அநேகமா இன்னும் கொஞ்ச நாளிலே மஞ்ச கலரோட இருக்கிற 'ஒரிஜினல்' மஞ்சள் கலர் (?!) பச்சைகிட்டே ஓடி வருமாம். ஏற்கனவே கருப்பு கலர் ஓடி வந்தது உங்களுக்கு தெரியும் தானே? காவி கலர் நட்டாத்துலே நிக்குது. என்ன ஆகும்னு தெரியலை! எதுவா இருந்தாலும் உங்க உடன் பிறந்த, உடன் பிறவா சகோதரிகளுக்கு 'பச்சை' கலரிலே சேலை எடுத்துக் கொடுத்தீங்கன்னா எல்லாம் நல்லா தெரியுமாம்!!!


dondu(#11168674346665545885) |

This is just the effect of VIBGYOR. I have seen personally in IDPL a labelling machine, which had problem in temperature control. Blue labels came as either as Indigo or green or even yellow depending on the temperature fluctuations.
Something similar seems to be at work in the optical illusion presented by our Gopi.
Regards,
Dondu Raghavan
Blogger No. 4800161


பெயரில்லா |

மணிக்கு கோபி சொன்னது...

மாயாவரத்தான்,

ஹி.. ஹி.. எல்லாம் செவப்பா தெரியாம இருந்தா சரி.

டோண்டு ஐயா,

நன்றி.. எனக்கு இன்னும் சரியான காரணம் தெரியலை :-(


பெயரில்லா |

மணிக்கு கோ.கணேஷ் சொன்னது...

கோபி !
அது அந்த transition effect ஆக இருக்கலாம். அதாவது ரோஸ் கலர் மறைந்து grey ஆகும் பொழுது இடைப்பட்ட கலராக இருக்கலாம் எனத் தோன்றுகிறது. ஊகம் தான். உறுதியாக சொல்ல முடியவில்லை.

நம்முடைய microsoft palette_லும் rose_க்கும் grey_க்கும் நடுவில் பச்சைதான் வருகிறது


பெயரில்லா |

மணிக்கு nira kurudu சொன்னது...

மாயவரத்தானின் ஆசை நிராசையா போகும் என்று பச்சைகிளி பச்சையம்மா சொல்றா...

அஞ்சு வருசத்துக்கு ஒரு முறை நிச்சயம் கலர் மாத்தி அடிச்சாதான் உருப்படும்.


பெயரில்லா |

மணிக்கு Positive RAMA சொன்னது...

//மனமென்னும் மாயாஜாலம்" தொடரை (நம்பிக்கை - கூகுள் குழுமத்தில்) விரைவில் தொடர முயற்சிக்கிறேன்.. //
கோபி தலைவா! அந்த மாயாஜாலத் தொடருக்காக நம்பிக்கையோடு காத்துள்ளேன்.


பெயரில்லா |

மணிக்கு contivity சொன்னது...

கோபி,

பச்சை நிறம் தோன்றக் காரணம், உங்கள் சட்டகத்தில் பச்சை நிறம் இருப்பது தான் என நினைக்கிறேன்.

நன்றி

(சட்டகம் - Template நன்றி இராம.கி ஐயா..)


பெயரில்லா |

மணிக்கு கோபி சொன்னது...

contivity,

படம் வரையப் பயன்பட்ட சட்டகத்தில் பச்சை இல்லீங்க.

இது கண்/மூளையின் நிறம் புரிந்து கொள்ளும் திறம் சம்பந்தப் பட்டதுன்னு நெனைக்கிறேன்..

உறுதியாத் தெரியலை...


வைசா |

பழைய பதிவு. எதையோ தேடப் போக இது கிடைத்தது. பச்சை வட்டம் எப்படி வருகிறது? பச்சைக்கும் சிவப்புக்கும் என்ன சம்பந்தம்? இந்த இரண்டு கேள்விகளுக்கும் விடை ஒன்றுதான். நிறங்கள் அனைத்தையும் சிவப்பு, பச்சை மற்றும் நீல நிறங்களைக் கொண்டு குறிக்கலாம் (அதுதாங்க RGB). நீல நிறம் வேண்டுமென்றால் நீலம் 100% மற்ற இரண்டு நிறங்களும் 0%. நீலம் இல்லாமல் போனால், அதாவது நீலம் 0% மற்ற இரு நிறங்களும் ஒவ்வொன்றும் 100% என்றால் மஞ்சள் நிறம் கிடைக்கும். அது போல பச்சை நிறத்திற்கு பச்சை 100% மற்ற இரு நிறங்களும் 0%. இதுவே மாறியிருந்தால், அதாவது பச்சை 0% மற்ற இரு நிறங்களும் ஒவ்வொன்றும் 100% இருந்தால் இந்தப் படத்தில் உள்ள வெளிர் சிவப்பு நிறம் கிடைக்கும்.

இனி கண்ணில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். ஒரு நிறத்தை கண்ணை அசைக்காமல் சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தால், அது விழித்திரையில் அந்த இடத்தில் அந்த நிறத்தை மட்டும் பார்க்கும்படி மூளை எடுத்துக் கொள்ளும் - தற்காலிகமாகத்தான். அந்த நிறம் திடீரென்று இல்லாமல் போகும் போது அந்த நிறம் இல்லாவிட்டால் என்ன இருக்குமோ அதைத்தான் மூளை காண்பதாக நினைக்கிறது. இங்கு வெளிர் சிவப்பு இல்லாமல் போகும் போது அதன் எதிர்மறையான பச்சை நிறம் தெரிவதாக மூளை நினத்துக் கொள்கிறது.

வைசா