வாழும் கலை அறிவோம்
Google Buzz Logo

சமீபத்தில் Art of Living நடத்தும் சுதர்சனக்ரியா® என்ற 6 நாள் மூச்சுப்பயிற்சி (ப்ராணயாமம்) வகுப்பிற்கு சென்று வந்தேன்.

தொடர்ந்து பயிற்சி செய்து வரும் போது மன அளவிலும் உடல் அளவிலும் நல்ல மாற்றங்களை உணர முடிகிறது. முக்கியமாக கோபம்/பிரச்சனை வசப்படும் போது கட்டுப்பாட்டை இழக்காமல் அதே சமயத்தில் நம் கோபம் நம்மிடமும் மற்றவரிடமும் எந்த எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தாமல் கையாளும் திறம் நாளடைவில் நம்மிடம் தானாகவே இயல்பாக வருகிறது.