அதியமான் எழுத்துரு மாற்றி
Google Buzz Logo

இன்றைக்கு பல விதமான "தமிழ்கள்" இணையத்தில் உள்ளன. உதாரணமாக TSCII,TUNE,TAB/TAM,Unicode என சொல்லிக் கொண்டே போகலாம்.

இதில் ஒருங்குறி(Unicode)யை மட்டும் பல இயங்குதளங்கள்(OS), செயலிகள்(applications) ஆகியன எந்த எழுத்துருவும் நிறுவாமலேயே படிக்க கூடிய வசதியைத் தருகின்றன. மற்ற தகுதரங்களை(Encoding Standards) பயன்படுத்தும் வலைத்தளங்களைப் படிக்க உரிய எழுத்துருக்களை நிறுவ வேண்டும்.

சில அலுவலகக் கணினிகளில் எழுத்துருவை நிறுவும் உரிமை(Admin Rights) மறுக்கப்பட்டிருக்கும். எந்த எழுத்துருவையும் நிறுவாமலேயே இத்தகைய வலைத்தளங்களை ஒருங்குறிக்கு மாற்றி படிப்பதற்காக அதியமான் எழுத்துரு மாற்றியை உருவாக்கியுள்ளேன்.

இந்த மாற்றியில் புதிதாக அறிமுகமாகியிருக்கும் (TUNE) தமிழ் புதிய ஒருங்குறி தகுதரத்திலிருந்தும், TSCII தகுதரத்திலிருந்தும், ஒருங்குறிக்கு மாற்றி படிக்கலாம்.

இந்த மாற்றியில் TSCII/TUNE தகுதரங்களை பயன்படுத்தும் வலைத்தள முகவரியை இட்டு, அந்த தளத்தில் பயன்படுத்தப்படும் தரத்தை தெரிவு செய்து, "Convert"ஐத் தட்டினால் அந்த தளம் ஒருங்குறிக்கு மாற்றப்பட்டு தெரியும். தற்சமயம் உள்நுழைவு(login) தேவைப்படும் தளங்களை இந்த மாற்றியில் பார்க்க இயலாது.


மேலும், இந்த மாற்றியில் TSCII/TUNE தகுதரங்களை கொண்ட எழுத்துக்களை (பொங்கு தமிழ் மாற்றியைப் போல) வெட்டி ஒட்டி ஒருங்குறிக்கு மாற்றவும் பயன்படுத்தலாம்.

பொங்குதமிழ் எழுத்துரு மாற்றியால் ஈர்க்கப்பட்டு செய்த இந்த மாற்றிக்காக, பொங்குதமிழ் மாற்றி அளித்த சுரதா யாழ்வாணன் அவர்களுக்கும் , இந்த மாற்றி உருவாக்க ஊக்கம் அளித்த முனைவர் நா.கணேசன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

அதியமான் எழுத்துரு மாற்றியின் சுட்டி: http://www.higopi.com/adhiyaman/

பிடித்திருந்தால் அனைவருக்கும் சொல்லுங்கள்.
பாராட்டுகள் மட்டுமென்றால் தனிமடலில் சொல்லுங்கள்.
குறையிருந்தால் இங்கே பின்னூட்டமாக சொல்லுங்கள்.

உமர் பன்மொழி மாற்றி
Google Buzz Logo

நம்மில் பலருக்கு இந்தி பேசத் தெரியும் ஆனால் படிக்கத் தெரியாது. உதாரணமாக BBC இந்தி வலைத்தளத்தில் (http://www.bbc.co.uk/hindi/) உள்ள‌ செய்தியை இந்தி பேச மட்டுமே தெரிந்தவர் புரிந்து கொள்ள தீர்வாக அமைந்ததே உமர் பன்மொழி மாற்றி. இந்தியில் உள்ள அந்த செய்தியை வெட்டி உமர் பன்மொழி மாற்றியில் ஒட்டி "தமிழுக்கு மாற்ற" தேர்ந்தெடுப்பதன் மூலம் அந்த செய்தியின் இந்தி உச்சரிப்பை தமிழில் படிக்கமுடியும்.

இதே போல, எந்த ஒரு மொழியில் உள்ள எழுத்துக்களின் உச்சரிப்பையும் மற்றொரு மொழியில் மாற்றி படிக்க இயலும்.

மேலும், தட்டச்சிடும் போது வேண்டிய மொழியை தேர்ந்தெடுப்பதன் மூலம் ஒரே இடத்தில் பல மொழிகளில் தட்டச்சிட முடியும்.

தேனீ இயங்கு எழுத்துருவையும், இன்னும் பல செயலிகளையும், ஆக்கங்களையும் தமிழ்க் கணிமை உலகுக்கு கொடையளித்த உமர் தம்பி அவர்களின் நினைவாக அவர் பெயரை இந்த பன்மொழி மாற்றிக்கு சூட்டியிருக்கிறேன்.

உமர் அவர்களோடு எனக்கு மின்னஞ்சல் தொடர்பு (அவரின் எழுத்துருவை தகடூருக்கு பயன்படுத்த அனுமதி பெறுவது தொடர்பாக) மட்டுமே இருந்தது. தன்னலமற்ற அவரின் அமைதியான தமிழ் கணிமைப் பணிகளை பாராட்ட வரிகளே இல்லை. அவரோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த பலர் அவர் குறித்து பேசும் போது, புகழ் விரும்பாத அவர் வாழ்ந்த காலத்தில் நானிருந்ததை பெருமையாய் நினைக்கிறேன்.

இந்த மாற்றியை உருவாக்க ஊக்கம் அளித்த‌ முனைவர் நா.கணேசன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த மாற்றியின் சுட்டி: http://www.higopi.com/ucedit/Multi.html

நிறை/குறை/யோசனைகளை எனக்கு மின்னஞ்சலிடுங்கள்.

தகடூர் - உங்கள் வலைத்தளத்தில்
Google Buzz Logo

உங்கள் வலைத்தளத்தில் தகடூர் தமிழ் மாற்றி போல ஒரு தமிழ் தட்டச்சுப் பெட்டியை வைக்க வேண்டுமா?

இந்தச் சுட்டியில் உள்ள எளிய வழிமுறைகளில் உள்ளபடி வேண்டிய நிரல் துண்டுகளை உங்கள் வலைப்பக்கத்தில் சேர்ப்பதன் மூலம் தகடூர் தமிழ் மாற்றியை உங்கள் வலைத்தளத்திலேயே செயல்படுத்தலாம்.

இந்த மாற்றியின் நிரலை தனியாய் தரவிறக்கம் செய்து தங்கள் வலைத்தளங்களில் பயன்படுத்துவோர் மின்னஞ்சல் மூலம் தெரிவித்தால் அவ்வப்போது நிரல் மாற்றம் செய்யும் போது அவர்களுக்கு அறிவிக்க வசதியாய் இருக்கும்.

நிறை/குறை/யோசனைகளை எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.