வலைத்தளத்தில் சில மாற்றங்கள்
Google Buzz Logo

எனது வலைத்தளத்தில்[www.higopi.com] சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன:

  1. தளத்தின் அனைத்து வலைப்பக்கங்களும் க்ணூ FDL உரிமத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு விட்டன.
  2. தளத்தில் பயன்பாட்டில் உள்ள அதியமான், தகடூர் உட்பட அனைத்து கருவிகளும் அடுத்த வெளியீடு (2.0) செய்யப்பட்டு க்ணூ GPL உரிமத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு விட்டன.
  3. பக்க அமைப்பின் வார்ப்புரு மாற்றப்பட்டுள்ளது.
  4. News மற்றும் FORUM பிரிவுகள் புதிய வார்ப்புருவில் அமைக்கப்பட்டு இயக்கத்தில் உள்ளன.

புதிய வார்ப்புரு தெரிவதில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் உங்கள் உலாவியின் Cache ஐ நீக்கிவிட்டு மறுபடி உலாவிப் பாருங்கள்.

மேலும் இந்த க்ணூ GPL உரிமத்தின் கீழ் நிரல்களை மறுபயன்பாட்டிற்காக எடுத்தாளும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை:
  1. நிரல்களை யார் வேண்டுமானாலும் க்ணூ GPL உரிமத்தின் அனைத்து விதிகளுக்குட்பட்டு நிரல் மாற்றம் அல்லது மறுபயன்பாடு செய்யலாம்.
  2. நிரல்களின் Comments ல் மூல நிரல் என்னுடையது என்பது குறித்துள்ள எந்த வரிகளும் நீக்கப்படவோ மாற்றப்படவோ கூடாது.
  3. இந்த உரிமம் கட்டற்ற திறவூற்று நிரலுக்கானது, எனவே இதர கட்டற்ற திறவூற்று நிரலுடன் மட்டுமே சேர்த்துப் பயன்படுத்தவோ மறுவெளியீடு செய்யவோ முடியும். எந்த தனியுரிமை (Properitory) நிரலுடனும் சேர்த்து பயன்படுத்தவோ அல்லது சேர்த்து மறு வெளியீடு செய்யவோ முடியாது.

சமீபத்தில் எனது நிரல்களை பயன்படுத்துவது தொடர்பாக ஏற்பட்ட சில பிரச்சனைகளால் இந்த உரிமப் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.

உங்கள் ஆதரவுக்கும் தொடர்ந்து அளித்து வரும் ஊக்கத்துக்கும் நன்றி.

மன்றம்(FORUM) சேவை துவங்கப்பட்டது
Google Buzz Logo

எனது வலைத்தளத்தில் உலாவியவர்கள் அதில் FORUM பகுதியை பார்த்திருக்கக் கூடும். இது நாள் வரை கட்டமைப்பில் இருந்த அந்தப் பகுதியில் இப்போது மன்றம்(FORUM) சேவை துவங்கப் பட்டுள்ளது.

http://www.higopi.com/forum/

எனக்கு வரும் மடல்களில் பல ஒரே தொழில்நுட்பக் கேள்வியை கேட்டு வரும். ஒரே பதிலை நானும் திரும்பத் திரும்ப அனுப்பி வைப்பேன். இதைத் தவிர்க்கவும், பொதுவான தொழில்நுட்பக் கேள்விகளை பொதுவில் வைத்து விடையளிக்கவும் வசதியாக இந்த மன்ற சேவையை துவங்கினேன். இதன் மூலம் நான் மட்டுமல்ல, ஒருவருக்கு தெரியாத கேள்விகளுக்கு இதர உறுப்பினர்கள் கூட பதில் அளிக்க இயலும்.

தற்போது தொழில்நுட்ப சந்தேகங்கள் மற்றும் தமிழ் மென்பொருட்கள் என முழுவதும் கணினி தொழில்நுட்பம் சார்ந்த இரு பகுதிகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. இனி வரும் காலத்திலும் முழுவதும் தொழில்நுட்பம் சார்ந்த மன்றமாகவே செயல்படும்.

ஏற்கனவே பல வலைத்தளங்களில் இருக்கும் தொழில்நுட்பம் சார்ந்த மன்ற சேவைகளுக்கும் இதற்கும் ஒரு வேறுபாடும் இல்லை. எனது வலைத்தளத்தில் இருக்கிறது என்பதைத் தவிர.

இந்த மன்ற சேவையில் உள்ள தலைப்புகளை/பதில்களை பார்வையிட உறுப்பினர் ஆக வேண்டிய கட்டாயமில்லை. புதிய தலைப்பு தொடங்கவோ அல்லது பதிலளிக்கவோ உறுப்பினரால் மட்டுமே முடியும்.

இந்த மன்றத்தின் செய்தியோடை http://higopi.com/forum/extern.php?action=active&type=RSS என்ற சுட்டியில் கிடைக்கும்.

இந்த மன்ற சேவையைப் பயன்படுத்த அனைவரையும் அழைக்கிறேன்.