பொழுதுபோக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொழுதுபோக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெளையாட்டுப் புள்ளயா நீங்க?
Google Buzz Logo

வலைப் பதியறவங்களே, வலை மேயறவங்களே,

வலைப் பதியற, வலை மேயற நேரம் போக தமிழ்ச் சேவையெல்லாம் செஞ்சி களைச்சி போயிருப்பீங்க. இதுல சில பேர் என்ன செய்யறதுன்னே தெரியாம சும்மா ஒக்காந்து யாரை வம்புக்கு இழுக்கலாம்னு யோசிச்சிக்கிட்டு இருப்பாங்க. அட, ரொம்ப போரடிக்குதா? வாங்க சும்மா ஒரு விளையாட்டு ஆடிட்டு வருவோம்.

இது வரைக்கும் http://www.higopi.com/ வலைத்தளத்துக்கு மொழி மாற்றிகள், எழுத்துரு மாற்றி ஆகியவற்றை பயன்படுத்தவும், தரவிறக்கவும் மட்டுமே வந்திருப்பீங்க. இனி அங்கே விளையாடவும் வரலாம்.

புதிதாய் சேர்க்கப்பட்டுள்ள http://www.higopi.com/games/ பகுதியில் இப்போதைக்கு Tic-Tac-Toeனு ஒரு விளையாட்டுக்கு நிரல் எழுதி சேர்த்திருக்கேன். Tetris, Snake போல இன்னும் சில விளையாட்டுக்களைச் சேர்க்கலாம்னு இருக்கேன்.

பின்னூட்டத்தில் பொன்ஸ் அளித்த யோசனைப்படி தமிழ் விளையாட்டுக்களை சேர்க்கலாம்னு இருக்கேன்

முடிஞ்சா Sudoku போன்ற விளையாட்டுக்களையும் சேர்க்கலாம்னு நெனைச்சிருக்கேன். ஏற்கனவே இணையத்தில் இது போன்ற விளையாட்டுக்களுக்கு இருக்கும் நிரல்களை சேர்க்காமல் நானே நிரல் எழுதிச் சேர்க்க நினைப்பதால் கொஞ்சம் தாமதமாகலாம்.

விளையாடிப் பாருங்க. உங்களுக்கு பிடிச்ச விளையாட்டு ஏதும் இருந்தா சொல்லுங்க. இந்தப் பகுதியில சேர்த்திடலாம்.

ஓரு பாடல் நான் கேட்டேன்
Google Buzz Logo

ஒரு அமைதியான மாலை, அழகான அந்தி நேர மஞ்சள் வானம், குளிர்ந்த தென்றல், இந்த இனிய வேளையில் அருமையான இசை கேட்கிறது.

எனது தெலுங்கு நண்பனொருவன் அமெரிக்காவிலிருந்து புதிதாய் வாங்கி வந்த ஆப்பிள் ஐ-ப்பாடில்(சுமார் 5000 பாடல்களை சேமிக்கும் திறனுடயது) அவன் பதிவேற்றிய சில தெலுங்கு பாடல்களை கேட்டுவிட்டுத் தருகிறேன் என்று வாங்கி(பிடுங்கி)யிருந்தேன்.

முதல் பாடல். முதன்முறை கேட்டபோது நெஞ்சினில் ஏதோ இனம் புரியாத குதூகலம். வெகுநாட்களாய் கேட்டுப் பழகிய பாடல் போன்ற ஒரு உணர்வு. உடன் சேர்ந்து பாட அழைத்தது அந்த இசை. அடுத்தப் பாட்டுக்கு தாவ மனசு வரவில்லை.

மீண்டும் அதே பாடலை கேட்டேன். இம்முறை மெதுவாய் ஒவ்வொரு வார்த்தையாய் அர்த்தம் புரிந்துக்கொண்டு கேட்டேன்.

இசை மட்டுமல்ல, பாடல் வரிகளும் எளிமையாயும் அருமையாயும் இருக்கிறது.

அந்த பாடல் "அவுனன்னா காதன்னா" என்ற தெலுங்கு படத்தில் வரும் "குடிகண்டலா" என்ற பாடல். இசை ஆர்.பி.பட்னாயக். பாடலை பாடியோர் எஸ்.பி.சரண், உஷா.

பாடலை எனக்கு தெரிந்த வரை தமிழாக்கம் செய்து கீழே கொடுத்துள்ளேன். என்னதான் மொழிமாற்றம் செய்தாலும் நிஜப்பாடலின் இனிமை போல வராது. (உதாரணமாக, தமிழ் சந்திரமுகியில் வரும் தெலுங்குப் பாடல் "ராரா.. சரசகு ராரா.." இதன் தமிழ் பதிப்பு தெலுங்கு சந்திரமுகியில் "வரம் நான் உன்னைத் தேடி" என்று வரும். அது தெலுங்கில் கேட்டது போல அத்தனை அருமையாய் இல்லை.)

சரி. பாடலை கேட்டுக்கொண்டே படியுங்கள்:

கோவில் மணிபோல சிரிக்கிறாய் ஏனோ
தெரியலை எனக்கு தெரியலை
கூந்தல் மணி(குஞ்சம்) போல துள்ளுகின்றாய் ஏனோ
தெரியலை எனக்கு தெரியலை
சரி என்ன சங்கதி, ஓ! பாலா
தெரியலை தெரியலை தெரியலை தெரியலையே

(கோவில் மணிபோல..)

உன் பக்கமாய் பார்த்திருந்தால் பசியும் மறக்கின்றது.
உன் பார்வையில் கட்டுண்டேன் மந்திரம் என்ன அது!
உன் பேச்சை கேட்டிருந்தால் நாளும் உருண்டோடுது
என்னோடு நீ இருந்தால் சொர்க்கமே சின்னது
மனம் ஏன் தான் இப்படி துள்ளியோடுதோ ராமா! ......தெரியலை
மல்லிகைப்பூ போல வாசம் வீசுகின்றதேனோ! ......தெரியலை
(கோவில் மணிபோல..)

உன் நிழலிலே நானுண்டா காண ஆசையிருக்கு
இந்த இன்பத்தின் பேரென்ன புதியதாக இருக்கு
என் கண்களை வேண்டாமென்றேன், உன்னை காணுவேன் என்றது
நான் எவ்வளவுதான் சொன்னாலும் இஷ்டம் அதுவென்றது
அட இதைதான் உலகம் காதல் என்கிறதோ! ......தெரியலை
அது தூராமாயிருந்தும் நெருங்கிப் போகுதே ராமா! ......தெரியலை
(கோவில் மணிபோல..)

பி.கு:நான் கவிஞனல்ல என்பதால் இனிமையான வார்த்தைகளிட்டு மொழிபெயர்க்கத் தெரியவில்லை. தெலுங்கு தெரிந்த யாரேனும் என் தமிழாக்கத்தில் தவறுகளிருந்து சுட்டிக்காட்டினால் திருத்திக்(தெரிந்து) கொள்கிறேன்.