தமிழ் விசை 0.3.2 வெளியீடு
Google Buzz Logo

தண்டர்பர்ட் மின்னஞ்சல் செயலியின் புதிய வெளியீடான 2.0.0.0 சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த புதிய செயலியில் பதிப்பு வேறுபாடுகள் காரணமாய் தமிழ்விசை 0.3.1 இயங்க மறுத்தது.

இந்த வழுவை சரி செய்து தமிழ்விசையின் அடுத்த பதிப்பான 0.3.2 இன்று வெளியிடப்பட்டது.

இந்த புதிய பதிப்பை பதிவிறக்கி நிறுவ http://tamilkey.mozdev.org/installation.htmlல் சொல்லியபடி செய்யவும். இந்த வெளியீட்டில் புதிய வசதிகள் ஏதும் சேர்க்கப்படவில்லை. எனவே, ஃபயர்ஃபாக்ஸ் பயன்படுத்துவோர் தமிழ் விசை 0.3.1 லிருந்து புதுப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.

விரைவில் https://addons.mozilla.org/en-US/firefox/addon/2994 தளத்திலும் இந்த புதிய பதிப்பு கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தளத்தில் தமிழ்விசை 0.3.2 தரவிறக்க கிடைக்கும் போது தற்சமயம் இந்த நீட்சியைப் பயன்படுத்தும் கணினிகளில் தானியங்கி முறையில் புதிப்பித்துக் கொள்ளும்.

பிற்சேர்க்கை: இந்த வெளியீட்டில் வழு ஏதும் தெரிவிக்க விரும்புவோர் http://tamilkey.mozdev.org/bugs.html என்ற முகவரியில் தெரிவிக்க வேண்டுகிறேன்.

யார் இந்த ஹாய் கோபி/ஹைகோபி ?
Google Buzz Logo

வலைப்பதிவு உலகில் சிலருக்கு ஹாய் கோபி/ஹைகோபின்னா யாரு, என்ன விவரம் அப்படின்னு தெரிஞ்சிக்க ஆவல் இருந்திருக்கும். இந்த ஹாய் கோபி/ஹைகோபின்னு சொல்றாங்களே யாருங்க அது? அதைத் தெரிஞ்சிக்க எனக்கும் கூட ஆவலாத்தான் இருந்துச்சி.

கோபிங்கற பேரு திடீருன்னு எப்படி ஹாய் கோபி/ஹைகோபின்னு மாறுச்சி? என்னோட பதிவர் விவரப் பக்கத்துல கூட நான் "கோபி(Gopi)"ன்னு தானே குறிப்பிட்டு இருக்கேன்? யாருகிட்டயும் நான் என்னை ஹாய் கோபி/ஹைகோபி அப்படின்னு அறிமுகப்படுத்திக்கிட்டதில்லையே. அப்படி இருக்கும் போது எப்படி எனக்கு திடீர்ன்னு ஹாய் கோபி/ஹைகோபின்னு பேரு வச்சாங்க?

யோசிச்சி பாத்தா தான் தெரியுது அது என்னோட வலைத்தளப் பெயரால வந்ததுன்னு. வலைத்தளம் பதிவு செய்யும் போது http://www.gopi.com/ என்ற பெயரில் ஒரு வலைத்தளம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுவிட்டதுன்னு சொன்னாங்க. பொதுவா வலைத்தளப் பெயர்கள் எளிதாக தட்டச்சு செய்ய வசதியாக சில எழுத்துக்களில் இருக்கவேண்டும் அதே சமயம் அர்த்தமுள்ளதாகவும் இருக்கனும். என்ன பெயர் வைக்கலாம்னு யோசிச்சப்ப "Say Hi to Gopi" என்று பொருள் வரும் வண்ணம் http://www.higopi.com/ என்று பதிந்தேன்.

அட எனக்கு ஒரு "Hi" சொல்லச் சொன்னா என்னையே ஹாய் கோபி/ஹைகோபி ஆக்கீட்டீங்களே.

சரி விசயத்துக்கு வருவோம். இன்றைக்கு வலைப்பதிவுலகத்தில் பல "கோபி"க்கள் இருக்கோம். அதனால் வெறும் "கோபி" என்று சொன்னால் குழப்பம் வரும் என்பதால் என்னை ஹாய் கோபி/ஹைகோபி என்று அழைத்திருப்பீர்கள். ஆனால் தமிழில் ஹாய் கோபி/ஹைகோபி என்று சொல்லும்போது அது ஒரு நல்ல பெயர்ச் சொல்லாகவோ அல்லது அர்த்தமுள்ள சொல்லாகவோ இல்லை.

எனவே, என்னை குறிப்பாக வேறுபடுத்தி விளிக்க விரும்புவோர் "தகடூர் கோபி"என அழைக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

பழசு புதுசு தொடர் பதிவு - தமிழ்மணம்
Google Buzz Logo

ஒன்றுக்கொன்று தொடர்புடைய சில பழைய/புதிய படங்களை பதித்து அவற்றை ஒப்பிட்டு அவரவர் பார்வையில் தோன்றும் எண்ணத்தை பகிர்ந்து கொள்ளும் ஒரு தொடர் பதிவு முயற்சி.

சரி ஆரம்பிக்கலாமா? முதலில் தமிழ்மணம் குறித்த சில படங்கள் கீழே.

தமிழ்மணம் ஆரம்பித்த மாதத்தில் அதன் பதிவுகள் பக்கம்தமிழ்மணம் ஆரம்பித்தபோது பதிவர் எண்ணிக்கை விவரம் (215)தமிழ்மணம் முகப்புப் பக்கம் (சென்ற வாரத்தில் ஒரு நாள்)


தமிழ்மணம் பதிவர் எண்ணிக்கை விவரம் (சென்ற வாரத்தில் ஒரு நாள்)(படங்களை முழு அளவில் பார்க்க அவற்றை சொடுக்குங்கள்)

மேலோட்டமாக பார்த்தபோது. என் பார்வையில் அன்றைக்கும் இன்றைப் போலவே எல்லா விதமான பதிவுகளும் இருந்துள்ளது. கதை/கட்டுரைகள் மற்றும் சிறப்பு/கூட்டுப் பதிவுகளுக்கு அன்று தனிக்கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மற்றபடி எண்ணிக்கையில் அதிகமானதை தவிர பொதுவாக இடுகைகளின் உள்ளடக்கங்களில் பெரிய மாற்றம் ஏதும் இல்லை. உங்களுடைய பார்வையில் தோன்றுவதை பின்னூட்டத்தில் பகிர்ந்திடுங்கள்.

மேலும், இந்த தொடரை யாரேனும் தொடர விரும்பினால் தொடரலாம். நீங்கள் இதைத் தொடரும் போது வருகையாளர்களுக்கு வசதியாக உங்கள் பதிவின் சுட்டியை இங்கே பின்னூட்டமாக இடுங்கள்.