அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
அப்பாடா... சென்னை வலைப்பதிவர் பட்டறை '07 நல்ல படியா முடிஞ்சதுங்க.
நிகழ்வுகளைப் பத்தி வந்த பதிவுகளை நீங்க படிச்சிருப்பீங்க. இன்னும் படிக்காதவங்க எல்லாம் ஸ்னாப் ஜட்ஜ்மெண்ட்க்கு ஒரு நடை போய் பாத்து எல்லாத்தையும் ஒரே மூச்சுல படிச்சிட்டு வந்துருங்க பாக்கலாம்... (நானும் எல்லாத்தையும் திருப்பித் திருப்பி சொல்லி உங்கள ப்ளேடு போட வேண்டியிருக்காதில்ல...)
சரி சுருக்கமா சொல்றேன்.
நெறய பேரை முதல் முறையா பாக்க முடிஞ்சதுல ரொம்ப சந்தோசமா இருந்ததுங்க. தொலைபேசி மூலமா ரஜினி ராம்கி, தல பாலா அப்புறம் இன்னும் கொஞ்சம் பேரு கூட பேசியிருக்கேன்னாலும் நேரிலே பாக்கறதுன்றது வேற இல்லீங்களா...? ஆனா என்ன... யாரோடுமே அதிகமா பேச முடியலைன்ற ஒரே குறைதான்.
அப்புறம் நிகழ்ச்சியில யாரு பேசினாங்க என்ன பேசினாங்கன்றதெல்லாம் நீங்க ஏற்கனவே படிச்சிருப்பீங்க. தட்டச்சுப் பயிற்சியிலும் செயல் விளக்க வகுப்பிலேயுமே அதிக நேரம் இருந்ததால அரங்கத்துலயும் வெளியேயும் நடந்த நெறைய விசயங்களை கவனிக்க முடியலை. பட்டறை சம்பந்தமான பதிவுகளை படிக்கும் போது தான் அடடா! இவ்வளவு நடந்ததா? அப்படின்னு தெரியுது.
"துன்றத்துக்கு..." நல்லா இருந்துச்சி. தல பாலா தான் பாவம் ஒடஞ்சி போன தயிர்சாத பொட்டலத்தையெல்லாம் வழிச்சி தொடச்சிக்கிட்டு இருந்தார்.
புதுசா ஃப்ளாஷ் கத்துக்கிட்டேன். பினாத்தலாருக்கு நன்றி.
கடைசி வரைக்கும் எழுத்துரு மாற்றப் பயிற்சியை மட்டும் என்னால கொடுக்க முடியலைன்னு நான் பொலம்பிக்கிட்டு இருந்ததை பாத்து பாவம் போவட்டும்னு கடைசியா க்ருபாவும் பொன்ஸும் ஒக்காந்து கேட்டாங்க. எழுத்துருக்களை ஒருங்குறிக்கு மாத்த இன்னும் நிறைய பேரை பிடிக்கனும். பாக்கலாம்...
இப்போதைக்கு வேற ஒன்னும் தோனலைங்க... அவ்ளோதான்...
அது சரி... தலைப்புக்கும் பதிவுக்கும் என்ன தொடர்புன்னு கேக்கறீங்களா? அரங்கத்துக்கு வந்தப்போ பெயரை கேட்டு பேட்ஜ் எழுதின ராஜா முதல், நிகழ்ச்சி முடிஞ்சி வீட்டுக்கு போற வரை எல்லாருமே "கோபி"ன்னு சொன்னா உடனே "ஹை கோபியா?" அப்படீன்னு கேட்டதால மனசுக்குள்ள கேட்ட சவுண்டு தாங்க அது... அட யாருமே இந்த இடுகையை படிக்கலையா... இல்ல... வேணுமின்னே கலாய்க்கறாங்களான்னு தெரியலை... ஏன்...? எதுக்கு இந்த கொல வெறி...?
சரி. நெக்ஸ்ட் மீட் பண்றேன்.
அடுத்த பட்டறை எங்கேப்பா? சீக்கிரம் அதுக்கான வேலையை ஆரம்பியுங்க. முன்னாலயே நம்மளுக்கும் ஒரு கடுதாசி தட்டிடுங்க. (வந்து சேர வசதியா இருக்குமில்ல)


