தமிழ் மாற்றியில் சில மாற்றங்கள்
Google Buzz Logo

தமிழ் கூறும் நல்லுலகுக்கு வணக்கம்.

த‌க‌டூரின் நிர‌லில் சில‌ மாற்ற‌ங்க‌ள் செய்துள்ளேன். சில‌ பிழைக‌ளை ச‌ரி செய்துள்ளேன், ஒரு வ‌ச‌தி அறிமுக‌ப்ப‌டுத்த‌ப் ப‌ட்டுள்ள‌து.

ச‌ரி செய்ய‌ப்ப‌ட்ட‌ பிழைக‌ள்
1) க‌ர்ச‌ர், த‌ட்ட‌ச்சு செய்யும் வ‌ரியில் நிற்காம‌ல் ப‌த்தியின் க‌டைசியில் நிற்கிற‌து.
2) வ‌ரியின் இடையில் த‌ட்ட‌ச்சு செய்ய‌ இய‌ல‌வில்லை.

இப்போது நீங்க‌ள் வ‌ரியின் இடையில் புதிய‌ வார்த்தைக‌ளை த‌ட்ட‌ச்சு செய்ய‌ முடியும். பத்தியின் கடைசிக்கு சென்று கர்சருடன் ஓடிப் பிடித்து விளையாடத் தேவையில்லை :-)

புதிய‌ வ‌ச‌தி
த‌மிழ் த‌ட்ட‌ச்சு ப‌ல‌கை - த‌மிழ் த‌ட்ட‌ச்சு அறிந்தோர் எளிதில் த‌ட்ட‌ச்சு செய்ய‌ வ‌ச‌தியாக‌ இந்த‌ Tamil Typewriter (Tamilnet99 பழைய தமிழ் தட்டச்சுப் பலகை வசதி யளனகப - Remington) தெரிவு செய்துகொள்ள‌லாம்.

இந்த மாற்றங்களை அறிவிக்கும் இச் சமயத்திலே ஆரம்ப காலத்தில் நிரலை மேற்பார்வை செய்து வழிநடத்திய சுரதா யாழ்வாணன் அவர்களுக்கும், தகடூருக்காக வலைத்தளத்திற்கான இடம் அளித்து உதவிய நண்பர் சாகரன் அவர்களுக்கும், தகடூரின் மாற்றங்களுக்கு யோசனை அளித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

த‌மிழ் மாற்றியின் சுட்டி:

http://www.higopi.com/ucedit/Tamil.html

நிறை/குறை/யோசனைகள் வரவேற்கப்படுகின்றன.

ரிஸ்க்
Google Buzz Logo

நானும் ரொம்ப யோசிச்சுப் பாத்தனுங்க. என் மூளைக்கு எட்டலை (இருந்தாத் தானேங்கறீங்களா... அதுவும் சரிதான்)

சரி. எனக்குத்தான் தெரியலையே, தெரிஞ்சவங்க யாரு கிட்டயாவது கேட்டுப் பாக்கலாம்னு கேட்டா, யாருக்குமே தெரியலை. அதனால கடைசியா உங்ககிட்ட கேட்டுடலாம்னு...

நாமெல்லாம் தமிழ் வலைப்பதிவாளர்கள் இல்லியா... அதனால தமிழ்ல பூந்து விளையாடுவோம்னு நம்பி என் கிட்டையும் ஒருத்தர் இந்தக் கேள்விய கேட்டாருங்க.

அது வேற ஒன்னுமில்லீங்க... இந்த ரிஸ்க் அப்படிங்கறாங்களே... (டிஸ்யூம் படத்துல கூட ரிஸ்க் பாஸ்கர்னு கூப்பிடுவாங்களே.. அதுல வர்ற ரிஸ்க் தானுங்க...)ரிஸ்க்ன்னா தனித்தமிழ்ல என்னாங்க...