குரங்கு சேட்டை
Google Buzz Logo

கீழேயுள்ள சுட்டியை வின்டோஸ் மீடியா ப்ளேயரில் தட்டுங்கள், 45 வினாடிகள் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் பேசும் வரை காத்திருங்கள். அப்றம் பாருங்க அமர்க்களத்தை!

http://myweb.hinet.net/home3/abulic-lin/monkey.wmv

சுதந்திரத் தேன்நிலா
Google Buzz Logo

போன இந்திய சுதந்திர தினத்தன்னிக்கி (புகைப்படம் கிடைக்க கொஞ்சம் லேட் ஆயிடுச்சி) நடந்த விழால தேசிய கீதம் பாடப்படும் போது அனைவரும் எழுந்து மரியாதை செலுத்துறங்க.இந்த படத்துல உட்கார்ந்துகிட்டிருக்க ஒருத்தரு பீகார் மாநில முதல்வருங்க (ராப்ரி லாலு), இன்னோருத்தர் மத்திய ரயில்வேத்துறை அமைச்சருங்க (லாலு)

வாழ்க பாரதமணித்திருநாடு!!

கண்ணாடி விஷயம் - II
Google Buzz Logo

சை..! திரும்பத்திரும்ப நன்பர்கள்ட்ட இருந்து கழிவறைக்கண்ணாடி விஷயமாவே மின்னஞ்சல் வருதுங்க.

இந்த மின்னஞ்சல், விடுதி, பயணத்தின் போது உபயோகப்படுத்தும் பொதுக்கழிப்பறை, குளியலறையில் உள்ள முகம் பார்க்கும் முழுநீளக்கண்ணாடி பற்றி

சில விடுதிகள்ல இந்தமாதிரி கண்ணாடிக்கு பின்னாடி கண்காணிப்புக்காக வீடியோ காமிரா உண்டு. முன்பு சொன்ன வேளிச்ச விளைவு காரணமாக. அது கண்ணாடி முன்னாலிருந்து பார்க்கறவங்களுக்கு தெரியாது. ஆனா உள்ள இருந்து பண்ற சேட்டையெல்லாம் (சிலருக்கு கண்ணாடியப் பாத்தா மூடு வந்துரும். கொரங்குமாதிரி பலவிதமா மூஞ்சிய அஷ்ட கோனலாக்கி பாப்பாங்க) கண்ணாடிக்கு அந்தப்பக்கமா இருக்குற காமிரா சாதுவா சத்தம் போடாம படம் புடிச்சிக்கிட்டு இருக்கும்.

இதுமாதிரி கண்ணாடிகளைக் அடையளம் கண்டுகொள்ள யுக்தி உண்டு.

கண்ணாடி மேல விரல் வைத்து அழுத்தினீங்கன்னா உங்க விரலுக்கும் விரலின் கண்ணாடி பிம்பத்துக்கும் இடையே ஒரு சிறு இடைவெளி இருந்தா அது ரசம் பூசப்பட்ட சாதாரணக் கண்ணாடி. இடைவேளி இல்லைன்னா அது மேல சொன்ன மாதிரி கண்ணாடி (பின்னால வீடியோ காமிரா இருக்கலாம் அதனால போனமா வேலய முடிச்சமா வந்தமான்னு இருக்கோனும் - கொரங்கு சேட்டையெல்லாம் பண்ணக்கூடாது).

கண்ணாடி விஷயம் - I
Google Buzz Logo

நன்பர் அனுப்பிய ஒரு மின்னஞ்சலில் ஒரு புகைப்படம் அனுப்பி இருந்தார்.

வெளியே..
உள்ளே..

சுவிஸ் நாட்டில் இது போல முழுவதும் கண்ணாடிச்சுவர்களால் ஆன பொதுக்கழிவறைகள் இருப்பதாக சொல்கிறார்கள். வெளியிலிருந்து பார்ப்போருக்கு உள்ளே இருப்பது எதுவும் தெரியாது. உள்ளிருந்து பார்ப்போருக்கு வெளியில் நடக்கும் எல்லாம் தெரியும். வெளியிலே வெளிச்சம் உள்ளே இருப்பதைவிட மிக அதிகமாக இருப்பதால் இது சாத்தியம் என்கிறார்கள்.

எனக்கு சந்தேகம் என்னன்னா

1) இது போல நிஜமாவே சுவிஸ்ல இருக்கா ?
2) இருந்தா உங்களுக்கு பயன்படுத்துறதுக்கு தைரியமிருக்கா?
3) ராத்திரியில உள்ளே வெளிச்சம் அதிகமா இருக்குமே அப்ப என்ன பண்ணுவாங்க ?

சுவிஸ் ஜனங்களே! இதுக்கு பதில் சொல்லுங்க! இல்லன்னா தலையே வெடிச்சிரும் போல இருக்கு

மின்னஞ்சல் - ஒம்போது கட்டளைகள்
Google Buzz Logo

இப்பல்லாம் ஒம்போது கட்டளைகள் தான் ரொம்பப் பிரபலம் அதனால நானும் மின்னஞ்சல் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டிய ஒம்போது விஷயங்களை இங்க குடுக்கறேன். வேண்டியவங்க எடுத்துக்கங்க!

1) மின்னஞ்சல் எழுதும்போது மளிகைக்கடை புளிமூட்டை மாதிரி நெருக்கமா ஒட்டி ஒட்டி எழுதாம போதிய இடைவெளி விட்டு எழுதுங்க, வண்ணங்களைப் பயன்படுத்தலாம்
(எச்சரிக்கை:
1. சிலசமயத்துல நிறைய இடம் விட்டால் அர்த்தம் மாறிவிடும் - ஜாக்கிரதை
2. ஒவ்வொரு நாட்டிலும் வண்ணங்களும் அதன் அர்த்தங்களும் மாறுபடும்.
3. பெறுபவர் வண்ணங்களை காட்ட இயலாத மின்னஞ்சல் மென்பொருளை உபயோகித்தால் உங்கள் வண்ணங்களால் பயனேதும் இல்லை.)


2) CAPS மற்றும் bold பயன்படுத்தும் போது படித்தால் அது தரும் அர்த்தம் தெரிந்து வேண்டிய இடத்தில் மட்டும் பயன்படுத்தவும். சிலருக்கு அது பிடிக்காது, எரிச்சலூட்டவும் செய்யும். (எனக்கு FULLCAPSல மின்னஞ்சல் வந்தா படிக்காமலேயே அழிச்சிடுவேன்)

3) CC என்று ஒன்று இருப்பதை பயன்படுத்த விரும்பினால் அதில் உள்ள முகவரிகளுக்கு உரியவர்கள் உங்களுக்கு மட்டும் தெரிந்தவராக இருந்தால் போதாது அவர்கள் ஒருவரை ஒருவர் அறிந்தவராகவும் இருக்க வேண்டும். (என்னோட நன்பனோட மூஞ்சி தெரியாத நன்பனின் மின்னஞ்சல் முகவரியை அறிமுகமே இல்லாமல் நான் எதுக்கு தெரிஞ்சிக்கனும் ?)

4) BCC யைப் பயன்படுத்துவது முதுகில் குத்துவதற்கு ஒப்பானது, கல்யாணப்பத்திரிகை போன்ற பொது அழைப்பு தவிர மற்ற மின்னஞ்சல்களுக்கு BCC யைப் பயன்படுத்துவது உங்கள் ஆரோக்கியத்துக்கு உகந்ததல்ல (ரகசியமாய் இருக்கட்டும் என்று நீங்கள் ஒருவருக்கு அனுப்பும் மின்னஞ்சலை இன்னொருவருக்கு BCC செய்கிறீர்கள், அவர் அதை உரியவரிடம் தம்பட்டம் அடித்துவிட்டார் என்றால் உங்களுக்கு உதை உறுதி.)
5) எரிதங்களை (உங்கள் முகவரி அல்லது நீங்கள் சம்பந்தப்பட்ட குழு முகவரி இல்லாமல் வரும் மின்னஞ்சல் - SPAM) லட்சியம் செய்யாதீர்கள். உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் கிடைப்பதாக அந்த மின்னஞ்சல் பொய் சொன்னாலும் கூட (ஒரு கோடி ரூபாயை மற்றவருக்கு தரும் அளவு இருப்பவன் வேலை வெட்டி இல்லாமல் மின்னஞ்சல் செஞ்சிக்கிட்டிருக்கமாட்டான்).

6) சங்கிலித்தொடர் மின்னஞ்சல்களை உடனடியாக உடைத்தெரியுங்கள் (திருப்பதி பாலாஜியே எழுதிய ஒரிஜினல் மின்னஞ்சலை உடைத்தால் ஒன்றும் ஆகாது. சங்கிலித்தொடரை உடைக்கமாட்டேன் பேர்வழி என்று அதை ஒரு கிருஸ்துவ அல்லது முஸ்லீம் நன்பருக்கு அனுப்பினால் அப்புறம் தெரியும் உங்களை அதிர்ஷ்டம் அடிக்குமா அல்லது வேற எதாவது அடிக்குமான்னு)

7) ஜோக், வைரஸ் பற்றி வரும் மின்னஞ்சல்களை அடுத்தவருக்கு அனுப்பாதீர்கள்
(1. வைரஸ் மின்னஞ்சல்கள் பொய்யா இருக்கலாம் - வைரஸ் பற்றி நிஜமாகவே கவலைப்படுபவர்கள் வைரஸ் பற்றிய தகவல்தளங்களை தொடர்ந்து படிப்பர், அவர்களுக்கு உங்கள் மின்னஞ்சல் உபயோகப்படாது. வைரஸ் பற்றி கவலைப்படாதவர்களுக்கு அது தேவையில்லை.
2. நீங்கள் அனுப்பும் ஜோக்கை படிக்கும்/ரசிக்கும் நிலையில் அதைப்பெறுபவரும் இருப்பார் என்று நிச்சயமில்லை)


8) அழகுக்காகவும் ஒப்புக்காகவும் (பெரும்பாலும் கையெழுத்துக்கு முன்) போடும் வாக்கியத்திற்கெல்லாம் பதில் எழுதிக்கொண்டிருக்காதீங்க ( "ப்ரியமுடன், கோபி" என்று என்னிடமிருந்து வரும் மின்னஞ்சலுக்கு "உங்கள் ப்ரியத்திற்கு நன்றி"ன்னு பதில் அனுப்பாதிங்க அப்றம் நான் வேற "உங்கள் நன்றியுணர்ச்சிக்கு நன்றி"ன்னு பதில் அனுப்பவேண்டிவரும்)

9) உருப்படியான தகவல்களை கொன்ட இணைதளத்தைப் படிக்க நேர்ந்தால் உடனே உணர்ச்சிவசப்பட்டு அதை மின்னஞ்சலில் உங்களுக்கு வேண்டியவர்களுக்கெல்லாம் அனுப்பாதீர்கள் (சரி சரி. பொழச்சிப் போங்க, இந்தத் தளம் மட்டும் விதிவிலக்கு :-P)

மப்புல இருக்கியா மாம்ஸு ?
Google Buzz Logo


வாரக்கடைசியானாக்க தண்ணி அடிக்க வேண்டியது. அப்புறம் எல்லாம் ரெண்டு ரெண்டத் தெரியுதுன்னு ஒளர வேண்டியது. தண்ணி அடிக்காதீங்கன்னா யாரும் அடங்க மாட்டேன்ராங்க

அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு இலவசமாக பேசலாம்
Google Buzz Logo

நீங்கள் அமெரிக்கா/கனடாவில் வசிக்கிறீர்களா? இந்தியாவில் உள்ள உங்கள் நன்பர்கள்/உறவினர்களோடு இலவசமாக தொலைபேசியில் 15 நிமிடங்கள் வரை பேச வேண்டுமா? ரிலையண்ஸ் நிறுவனம் இந்த இலவச சேவையை 2004 ஆகஸ்ட் 31 வரை தருகிறது

  1. உங்கள் தொலைபேசியில் 1-866-573-5426 ஐ டயல் செய்யவும்
  2. நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டிய இந்திய தொலைபேசி எண்ணை டயல் செய்யவும்
  3. 15 நிமிடங்கள் வரை இலவசமாக பேசலாம்
மேலும் விவரங்களுக்கு https://www.relianceindiacall.com/US/images/15aug-offer.gif அல்லது https://www.relianceindiacall.com/ என்ற சுட்டியைப் பார்க்கவும்

எச்சரிக்கை: எனது கனிப்பில் ரிலையண்ஸ் நிறுவனம் ஒரு நேர்மையற்ற நிறுவனம். இந்த சலுகையின் பின் உள்ள வியாபார நோக்கம் தற்சமயம் எனக்குத் தெரியவில்லை. ஆனால் ரிலையண்ஸ் நிறுவனம் இதுவரை எதையுமே இலவசமாகத் தந்ததில்லை (பிற்காலத்தில் வட்டியும் முதலுமாக வசூலித்துவிடும் - இவ்விஷயத்தில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை)

செல்போன்
Google Buzz Logo


இப்பல்லாம் செல்போன்ல காமிரா, வீடியோ ரெக்கார்டிங், ஆடியோ ரெக்கார்டிங், இன்னும் என்னன்னவோ வசதிங்க வருது. மேல இருக்கிற வசதிங்க வந்தா என்னய மாரி திருட்டுப் பசங்களுக்கெல்லாம் எவ்ளோ வசதியா இருக்கும் ?

மொதல் தடவை
Google Buzz Logo

ஊர்ல ஒரு தாத்தாவும் பாட்டியும் 60 வயசுக்கு மேலயும் சந்தோசமா வாழ்க்கை நடத்திகிட்டு இருந்தாங்க. இந்த ரகசியத்தைத் தெரிஞ்சிக்கிட்டா நாமளும் நம்ம வருங்காலத்துல பொண்டாட்டி கூட கடைசிவரை சந்தோசமா இருக்கலாமேன்னு நெனச்சி அவரு கிட்ட கேட்டேன்

"அது ஒரு பெரிய கதை" என்று ஆரம்பித்தார் தாத்தா.

எங்களுக்கு கல்யாணமான புதுசுல கிராமத்து ஜனங்கள்ளாம் சேந்து ஒரு வெள்ளாட்டுக் குட்டிய கல்யாணப் பரிசா குடுத்தாங்க. சரி கல்யாணத்துக்கு பரிசா வந்ததாச்சேன்னு நானும் அவளும் அந்த வெள்ளாட்டுக் குட்டிய வெட்டி கறி சமைக்காம பிரியமா வளக்க ஆரம்பிச்சம். ஆனா அந்த ஆட்டுக்குட்டி என்னோட பழகற மாறி அவளோட பழகாது. ஏன்னே தெரியாது, அவ அதொட பக்கத்துல போனாலே "ப்ர்ர்ர்ர்"னு சத்தம் பொடும், மொறைக்கும் இன்னும் என்னன்னவோ செய்யும்.

இப்டி இருக்கயில ஒரு நா அத என் பொண்டாட்டி மேய்ச்சலுக்கு கூட்டினு போனா. நானும் கூடவே போனேன். திடீர்னு அந்த ஆட்டு குட்டி என் பொண்டாட்டிய வேகமா முட்டிடிச்சி. ஆனா அவ சிரிச்சிகிட்டே "மொதல் தடவ" அப்பிடின்னா.

கொஞ்ச தூரம் போயிருப்பம் ஆட்டு குட்டி மறுபடி முட்டிச்சி இப்பவும் அவ சிரிச்சிகிட்டே "ரெண்டாவது தடவ" அப்பிடின்னா.

மறுபடி கொஞ்ச தூரம் போனாக்க ஆட்டுக்குட்டி மறுபடி முட்டிச்சி. இப்ப என் பொண்டாட்டி "மூனாவது தடவ" அப்பிடின்னு சொல்லி அருவாள எடுத்து ஒரே போடு. அவ்வளவு தான் ஆட்டுக்குட்டி அங்கயே காலி. எனக்கு வந்துச்சி பாரு கோவம், "ஏண்டி அறிவு கெட்டவளே, கல்யணத்துக்கு பரிசு குடுத்ததப்போய் வெட்டிட்டியே" அப்டின்னு கத்திகிட்டே அவள பளார்னு ஒரு அரை விட்டேன்.

ஆனா அவ சிரிச்சிகிட்டே "மொதல் தடவ" அப்பிடின்னா.

அப்பத்துலந்து இப்பவரக்கும் சந்தோசமா குடும்பம் நடத்றம் அப்பிடின்னாரு தாத்தா

சுதந்திரம்னா என்ன அங்கிள் ?
Google Buzz Logo

சுதந்திரதினத்தன்று மதியம் ஹாயாக டி.வி. பார்த்துக்கொண்டிருந்தபோது பக்கத்து வீட்டில் வசிக்கும் தமிழ்க் குடும்பத்தின் நாலரை வயது வாண்டு அந்தக் கேள்வியைக் கேட்டாள்.

"சுதந்திரம்ங்கிறது அடுத்தவங்க சுதந்திரத்துல தலையிடாம இருக்கிறது" என்று குழப்ப ஆரம்பித்து (இவளுக்கு இந்திய சுதந்திரம் பற்றி சொன்னால் புரியுமா என்ற சந்தேகத்தில்) தனிமனித சுதந்திரத்தைப் பற்றி விளக்கினேன்.

பொறுமையாக கேட்டவள், "அப்ப எதுக்கு சன்டே ஸ்கூல் வச்சி ப்ரேயர் முடிஞ்சதும் வீட்டுக்கு அனுப்பிட்டாங்க?" என்றாள். சரி இவளுக்கு விளக்குவதற்கு பதிலாக டி.வி. பார்க்கச் சொன்னால் இது பற்றி ஏதாவது சொல்வார்கள் என நினைத்து டி.வியில் தமிழ் சேனல்களை திருப்ப ஆரம்பித்தேன் (முன்தினம் ஜெயா டி.வியில் "வரலாற்று வடுக்கள்" நிகழ்ச்சி சுதந்திரப் போராட்ட வரலாற்றை விளக்குவதாக இருந்தது)

விஜய் டி.விக்காரர்கள் அதிகமாக சினிமா பார்ப்பார்கள் போல, சுதந்திரப் போராட்ட வீரர் நடிகர் விஜயகாந்த் பற்றி "விஜி @ கேப்டன்" என்று ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பினார்கள். பிறகு இந்தப் பாவத்தை(புன்னியத்தை?) போக்க "காமராஜ்" படம் ஒளிபரப்பினார்கள்.

ராஜ் டி.வியில் ராத்திரி 9 மணிக்கு திடீர் ஞானோதயமாக "வீரப்பாண்டிய கட்டபொம்மன்" படம் ஒளிபரப்பினார்கள்.

சன் டி.வியில் இந்தத் தொல்லையெல்லாம் வேண்டாம் என நினைத்தார்களோ என்னவோ முக்கால்வாசி நிகழ்ச்சிகள் விளம்பரதாரர் நிகழ்ச்சிகளாகவே இருந்தன.

மற்றபடி அனைத்து டி.விக்காரர்களும் வரைமுறையின்றி சுதந்திரப் போராட்ட வீரர்களான தனுஷ், ப்ரசாந்த், விஜய், ஏ.ஆர். ரகுமான், ரீமாசென், கோபிகா போன்றவர்கள் பற்றிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினார்கள்.

இவர்கள் அனைவரும் ஏனோ இன்னோரு சுதந்திரப் போராட்ட வீரரான நடிகர் அர்ஜூன் (இவர் ஒரு சுதந்திர தினத்தில் பிறந்ததால் என்னவோ தானே இந்தியாவை தோளில் தாங்குவதாக படமெடுப்பவர்) பற்றி ஏதும் சொல்லவில்லை.

என்னவோ பண்ணித்தொலையட்டும் அவங்க சுதந்திரத்துல ஏன் தலையிடனுங்கிறீங்களா ? அதுவும் சரிதான்

இந்த நிகழ்ச்சிகளெல்லாம் பார்த்துப் பார்த்து சலித்துப் போனதாலோ என்னவோ பக்கத்து வீட்டு வாண்டு தூங்கிப்போயிருந்தாள். அப்படியே அவள் தூக்கம் கலையாமல் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்தேன்.

அவளுக்குப் புரிந்திருக்கும் சுதந்திரம்னா என்னன்னு. உங்களுக்குப் புரிந்ததா?

சுதந்திர தின நன்னாள் வாழ்த்துக்கள்
Google Buzz Logo

கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத்தக
Google Buzz Logoமாட்டிக்கிட்டியேடா மாதவா!
Google Buzz Logo

மரணப் படுக்கையில் இருக்கும் மனைவி கனவனிடம் -

மனைவி: நான் செத்துப் போயிட்டா நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்குவீங்களா ?
கனவன்: சேச்சே! உன் நினப்பிலேயே கடைசி காலம் வரை இருந்துருவேன்
மனைவி: ம்ஹூம். நீங்க கண்டிப்பா என்னை மறந்து இன்னொரு கல்யாணம் பண்ணிக்கனும்
கனவன்: எப்படிம்மா உன்னை மறப்பேன். இப்படி எல்லாம் பேசக்கூடாது.
மனைவி: அதெல்லாம் முடியாது. இன்னொரு கல்யாணம் பண்ணித்தான் ஆகனும்
கனவன்: சரி. பண்ணிக்கறேன்
மனைவி: அப்படி பண்ணிக்கிட்டா, அவளோட நம்ம படுக்கையில தான் தூங்குவீங்களா?
கனவன்: கண்டிப்பா! வேற எங்க தூங்குறது
மனைவி: நம்ம கல்யாணப் போட்டோவ எடுத்துட்டு புது கல்யாணப் போட்டோவ வச்சிப்பீங்களா ?
கனவன்: ஆமா, இல்லன்னா உன் ஞாபகம் அடிக்கடி வருமே.
மனைவி: அவளுக்கு புதுசா பட்டுப் புடவையெல்லாம் வாங்கித் தருவீங்களா ?
கனவன்: இல்லை அவளுக்கு சுடிதார் தான் புடிக்கும்
மனைவி: !!!!?????
கனவன்: (மனசுக்குள்) அடடா, மாட்டிக்கிட்டியேடா மாதவா. ஓட்ட வாய்டா உனக்கு

கோலிவுட் இன்க். மென்பொருள் நிறுவனம்
Google Buzz Logo

ப்ராஜெக்ட் மானேஜர் 'கேப்டன்' விஜயகாந்த் முதலில் வருகிறார்.

ப்ராஜெக்ட் மீட்டிங்கில்-

"இந்த ப்ராஜெக்ட்ல மொத்தம் ஒரு லட்சத்தி பத்தொன்பதாயிரத்தி எழுனூத்தி முப்பத்தி எட்டு லைன் கொடு இருக்கு, அதுல நாம எளுதினது நாப்பத்தஞ்சாயிரத்தி நானூத்தி முப்பத்தி நாலு லைன்,அதுல முப்பதாயிரத்தி நூத்திப்பதினாலு லைன் கமண்ட்ஸ் மட்டும், அவுட்சோர்ஸ் பண்ணது எழுவத்தி நாலாயிரத்தி முன்னூத்தி நாலு லைன், அதுல ஐம்பத்திரெண்டாயிரத்தி முன்னூத்தி பதினாலு லைன் கமெண்ட்."

"இந்த ப்ராஜக்ட் ஆரம்பிச்சப்போ இருந்த டீம் சைஸ் ஐம்பத்தினாலு பேர், நடுவுல வேலய விட்டு போனவங்க பதிமூனு பேர், டெட்லைன் மீட் பண்ண வேலைக்கு சேர்த்த கன்சல்ட்டன்ட்ஸ் பத்து பேர், எம்ப்ளாயீஸ் இருவத்தி நாலு பேர்."

"இந்த ப்ராஜக்ட் ஆரம்பிச்சப்போ அதோட காஸ்ட் ஐம்பத்திமூனுலட்சத்தி நாப்பத்தஞ்சாயிரத்தி அறுனூத்தி நாப்பத்தஞ்சி ருபாய் முப்பத்தாறு பைசா. முடிக்கிறப்போ அதோட காஸ்ட் மூனுகோடியே ஐம்பத்திமூனு லட்சத்தி இருவத்திமூவாயிரத்தி அறுனூத்திபதினேழு ரூபாய் இருவத்திஎட்டு பைசா"

"ஆக மொத்தம் எல்லாருமச் சேர்ந்து என் தலையில மொளகா அரைச்சுட்டாங்க சார் !!!" (எமோசனாகிறார்).

எனக்கு இந்த சாப்ட்வேர் தொழிலே வேணாம், நான் பாகஸ்தான் போயி தீவிரவாதிங்கள ஷூட் பண்ண போறேன். குட் பை!

(காப்டன் கோபமாக வெளியேறுகிறர், அனைவரும் செய்வதறியாமல் திகைத்துப்போய் நிற்கின்றனர்).

அடுத்ததாக,
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் (இவரும் ஒரு ப்ராஜெக்ட் மேனேஜர்)

"கண்ணா, இந்த பக்ன்னு ஒன்னு நம்ம ப்ராஜெக்ட்ல இருக்க கூடாது,அது இந்த பாட்ஷாவுக்கு புடிக்காது."

"ஓரு பக் இருந்த, அதுல நூறு பக் இருக்குனு அர்த்தம்".

"கண்ணா, பக் இருந்த என்ன கூப்பிடு, சும்மா பறந்து பறந்து பக் எல்லாம் பிக்ஸ் பண்ணிடுறேன் :-)"

"கஸ்டமர் சொல்றான்(பக்), அருணாசலம் பிக்ஸ் பண்றான் ;-)"

சூப்பர் ஸ்டார் எல்லாருக்கும் ப்ராஜெக்ட் பற்றி விளக்குகிறார்

"கண்ணா, ப்ரொஜெட் லைப் சைக்கிள்ங்கிறது அண்ணாமலை சைக்கிள் இல்ல, அது வேற,இது வேற. இப்புடு சூடு ( பாடுகிறார் )

ரா! ,ராரா ராமைய்யா, எட்டுக்குள்ள ப்ராஜெக்ட் இருக்கு ராமைய்யா,
எட்டு எட்டா ப்ராஜெக்ட்ட நீயும் பிரிச்சுக்கோ, எந்த எட்டில் இப்பொ இருக்க தெரிஞ்சுக்கோ.

முதல் எட்டில் செய்யாதது ரிக்கொயர்மெண்ட் அல்ல,
நீ ரேண்டாம் எட்டில் செய்யாதது டிசைனும் அல்ல

(ரா! ,ராரா ராமைய்யா)

மூனாம் எட்டில் செய்யாதது அனாலிசிஸ் அல்ல
நீ நாலாம் எட்டில் செய்யாதது இம்ப்ளிமெண்ட்டேசன் அல்ல

(ரா! ,ராரா ராமைய்யா)

ஐந்தாம் எட்டில் செய்யாதது கோடிங் அல்ல
நீ ஆறாம் எட்டில் செய்யாதது டெஸ்டிங் அல்ல

(ரா! ,ராரா ராமைய்யா)

ஏழாம் எட்டில் செய்யாதது பக் பிக்ஸ் அல்ல
நீ எட்டாம் எட்டுக்கு மேல இருந்தா நிம்மதி இல்ல

(ரா! ,ராரா ராமைய்யா)

அடுத்ததாக,
உலக நாயகன் கமலஹாசன் ஒரு ப்ரோக்ராமர்

"என்னது கஸ்ட்டமர் கிட்ட இருந்து பக்-ஆ??"

'ஹான், ஹான்', ஆ, ஐயோ கடவுளே,...............

(கான்பரன்ஸ் ரூமை வட்டமடிக்கத் துவங்குகிறார்)

"இந்த ப்ராஜெக்ட் அசிங்கம், அசிங்கம்,டிசைன் அசிங்கம், இம்ப்ளிமெண்ட்டேசன் அசிங்கம்,அபிராமிய (சீனியர் ப்ரோக்ராமர்) பாக்கனும், அங்க பென்டதால் மரம் எல்லாம் இருக்கும், மலை மேலபோகனும் (ஆன் சைட்), அப்போ தான் இந்த ப்ராஜெக்ட் வேற மேனேஜருக்கு போகும். அபிராமி, அபிராமி

(மயங்கி விழுகிறார்)

அடுத்ததாக
நவரசநாயகன் கார்த்திக்
இந்த ப்ராஜெக்ட் இருக்கு பாரு, அது இந்த ரோஸ் மாதிரி, அழகா, நம்ம ரம்பா(டீம் மெம்பர்) இல்ல,ரம்பா பாதிரி இருக்கும்.

(மேற்கொண்டு டிஸ்கஸ் செய்ய ரம்பாவை அழைத்துக்கொண்டு ஊட்டிக்கு செல்கிறார்)

அடுத்ததாக
வைகை புயல் வடிவேலு
பிரண்ட்ஸ் பட நடிகர்கள் இந்த ப்ராஜெக்ட் செய்துள்ளார்கள். நிறைய குறைகளோடு ப்ராஜெக்ட் ரிலீஸ் ஆகியுள்ளது

வ:டேய் இங்க வாங்கடா..நீ போயி இருக்குர எல்லா பக்-உம் பிக்ஸ் பண்ணு.
(ரமேஷ் கிருஷ்ணா செல்ல அவரை பின் தொடர்ந்து சூர்யா, விஜய் இருவரும் செல்கின்றனர்)

வ:டேய்!! நீங்க எங்கடா போறீங்க ??
சூ & வி : பக் பிக்ஸ் பண்ண..
வ:இது வரைக்கும் பண்ண பக் போதும், ஓன்னும் பினிஷ் பண்ண வேணாம்.
(சூ,வி,ர.கி திரும்பி வருகிறார்கள் )

வ:டேய்!, நீ ஏன்டா வந்த ??
ர.கி :நீங்க தானே பக் பிக்ஸ் பண்ண வேணாம்னு சொன்னீங்க..
வ:பக் பிக்ஸ் பண்ண வேணாம்னு சொன்னது அவங்கள, உன்னை இல்ல.
(ர.கி பக் பிக்ஸ் பண்ண செல்கிறார் )
ர.கி : முக்கியமான பக் எது, முக்கியமில்லாத பக் எதுன்னு எப்படி கண்டுபுடிக்கிறது
வ:நீ பிக்ஸ் பண்ற எல்லமே, முக்கியமான பக் தான். போ! போயி வேலைய ஒழுங்காச் செய்

வ:நீங்க இங்க வாங்கடா ( சூர்யா, விஜய் இருவரும் வருகின்றார்கள்)
வ:(விஜய்யிடம்),டேய்! நீ இவன் கூடப் போயி டீபக்கிங் பண்ணு (விஜய் போகிறார்)

வ:நீ என் கூட வா (சூர்யா போகிறார்)
வ:அந்த பக் ஓபன் பண்ணு
சூ:(ஓபன் பண்ணுகிறார், மெதுவாக டைப் செய்ய ஆரம்பிக்கிறார்)
வ:பாத்து, கீ-போர்டுக்கு வலிக்கும்ல, மெதுவா பாத்து பாத்து
வ:வேகமா டைப் பண்ணித் தொலைடா

சொல்வண்மை ( ஆங்கிலம் )
Google Buzz Logo

கீழுள்ள சொற்றொடரை உருவாக்கியவர் கண்டிப்பாக ஆங்கில மொழியில் சொல்வண்மை கொண்டவர்

"I do not know where family doctors acquired illegibly perplexing handwriting nevertheless, extraordinary pharmaceutical intellectuality counterbalancing indecipherability, transcendentalizes intercommunications incomprehensibleness. "

இந்த சொற்றொடரில் ஒவ்வொரு வார்த்தையும் அது எத்தனையாவதாக வருகிறதோ அத்தனை எழுத்துக்களை கொண்டிருக்கும் ( உ.ம். 2வது வார்த்தை 2 எழுத்துக்கள் உடையது).