பூங்கொத்தும் மலர் வளையமும்
Google Buzz Logo

ஒரு வியாபாரி தனது புதிய நிறுவனத்தை ஆரம்பிக்க இருந்தார். அவருக்கு அவரது நண்பர் ஒரு பூங்கொத்தை அனுப்பச் சொல்லி பூங்கொத்து விற்பனையாளரிடம் சொல்லியிருந்தார்.

நிறுவனத் துவக்க தினத்தன்று பூங்கொத்துக்கு பதிலாக 'உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்' என்ற வாசகத்துடன் மலர்வளையம் வந்தது. வியாபாரி மிகுந்த கோபத்தோடு பூங்கொத்து விற்பனையாளருக்கு தொலைபேசி செய்து திட்டினார்.

அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்ட பூங்கொத்து விற்பனையாளர். "நீங்களாவது பரவாயில்லை. இன்னிக்கு உங்களுக்கு அனுப்ப வேண்டிய பூங்கொத்தை ஒரு சவ ஊர்வலத்துக்கு அனுப்பி வச்சிட்டான் எங்க கடைப் பையன். அதுல 'உங்களின் இந்தப் புதிய துவக்கம் வெற்றிபெற வாழ்த்துகிறேன்'ன்னு எழுதியிருந்துச்சி. அங்க இருந்து எப்ப திட்டுவரும்னு பயமாயிருக்கு" அப்படின்னார்

4 கருத்து(க்கள்):

பெயரில்லா |

மணிக்கு Eelanathan சொன்னது...

கோபி உங்கள் இரத்தம் தேவை அறிவிப்பை இப்போதுதான் பார்த்தேன். உங்களின் சமூக விழிப்புணர்வுக்குப் பாராட்டுக்கள்.முன்னெப்போதாவது இரத்ததானம் செய்திருக்கிறீர்களா?


பெயரில்லா |

மணிக்கு கோபி சொன்னது...

ஈழநாதன்,

சில முறைகள் செய்துள்ளேன். (சென்ற மாதம் சபரிமலைக்கு செல்லுமுன் கடைசியாக செய்தேன்)

எனது இரத்தவகை O -ve (அரிய வகை) என்பதால் முடிந்த வரையில் இரத்ததானம் செய்து வருகிறேன்.

தகுதியுள்ள எல்லோரும் தயக்கம் ஏதுமின்றி இரத்ததானம் செய்ய வேண்டும் என்பதே என் அவா.


பெயரில்லா |

மணிக்கு காசி சொன்னது...

நானும் பலமுறை செய்துள்ளேன். இங்கே அமெரிக்காவில் ஒரு அனுபவம்: ஒருமுறை ரத்ததானம் செய்ய நான் பணிபுரியும் நிறுவனத்தின் ஒரு கட்டடத்திலேயே வசதி ஏற்பாடு செய்திருப்பதாக வேண்டுகோள் வரவே, ஆசையுடன் போய், வரிசையில் நின்றேன். ஒரு படிவம் நிரப்பச் சொன்னார்கள், பிறகு 'உன் ரத்தம் எங்களுக்கு வேண்டாம'் என்று சொல்லிவிட்டார்கள். அம்மை தடுப்பூசி, கடைசியாக எப்போது இந்தியாவில் இருந்தாய் போன்ற கேளவிகளை வைத்து, நம் ரத்தத்தை இவர்கள் விலக்கிவிடுகிறார்கள். 'போங்கடா...' என்று வந்துவிட்டேன்.


பெயரில்லா |

மணிக்கு மூர்த்தி சொன்னது...

பூங்கொத்தும் மலர்வளையமும் கதை நன்று. முன்னர் சிரிப்புத் துணுக்காகப் படித்த ஞாபகம்!