புது ப்ளாக்கரில் கோபி பிரச்சனை
Google Buzz Logo

புது ப்ளாக்கருக்கு மாறிய வலைப்பதிவுகளி்ல் சில இடுகைகளில் பின்னூட்டங்களில் பின்னூட்டமிட்டவர் பெயர் accented ஆகத் தெரிகிறது.

புதிய இடுகைகளின் பின்னூட்டங்களில் பின்னூட்டமிட்டவர் பெயர் சரியாக தெரிகிறது. எனினும் பழைய இடுகைகளில் ஏற்கனவே உள்ள பின்னூட்டமிட்டவர் பெயர் accented ஆகத் தெரிகிறது.

இது குறித்து ப்ளாக்கரின் Known Issues பக்கங்களில் பார்த்தால் "ஆங்கிலமல்லாத வலைப்பதிவுகளுக்கான ஆதரவு தருவது மிகப்பெரிய வேலை... சென்று கொண்டிருக்கிறது" என்று சொல்லியிருக்கிறார்கள்.

நமது வலைப்பதிவின் வார்ப்புருவில் மாற்றம் செய்து பழைய இடுகைகளில் ஏற்கனவே உள்ள பின்னூட்டமிட்டவர் பெயரை சரியாக தெரிய வைக்கலாம்.

உங்கள் வார்ப்புருவில் </HEAD> என்பதற்கு முன்னால் கீழ்க்காணும் நிரல்த் துண்டை சேர்த்திடுங்கள்:

<script>
function asc2uni(istr)
{
retstr = "";
i = 0;
while( i < istr.length)
{
if(istr.charCodeAt(i) < 128 || istr.charCodeAt(i) > 255 )
{
retstr += String.fromCharCode(istr.charCodeAt(i));
i++;
}
else
{
chr = istr.charCodeAt(i+2);
if(istr.charCodeAt(i+1) == 175)
chr += 64;
retstr += "&#x0B"+ tohex(chr)+";";
i+=3;
}
}
return retstr;
}

function tohex(i)
{
hexarr = '0123456789ABCDEF'.split("");
a2 = '';
ihex = Math.floor(eval(i +'/16'));
idiff = eval(i + '-(' + ihex + '*16)');
a2 = hexarr[idiff] + a2;
while( ihex >= 16)
{
itmp = Math.floor(eval(ihex +'/16'));
idiff = eval(ihex + '-(' + itmp + '*16)');
a2 = hexarr[idiff] + a2;
ihex = itmp;
}
a1 = hexarr[ihex];
return a1 + a2 ;
}
</script>
பின்னர் வார்ப்புருவில்

பழைய ப்ளாக்கர் வார்ப்புரு எனில்:

<$BlogCommentAuthor$> என்பதைத் தேடி அதை கீழ்க்கண்டவாறு மாற்றிக் கொள்ளுங்கள்:

<script>
document.write(asc2uni('<$BlogCommentAuthor$>'));
</script>


புதிய ப்ளாக்கர் வார்ப்புரு எனில்:

ஜெகத் கைமண்ணளவு பதிவில் சொல்லியபடி செய்யுங்கள்

வார்ப்புருவை சேமித்திடுங்கள். அவ்வளவு தான்! இப்போது உங்கள் வலைப்பதிவின் பின்னூட்டப் பெயர்கள் "கோபி (Gopi)" என்பது போல் சிதறாமல் "கோபி (Gopi)" என்பது போல் சரியாய் காட்டும்.

பி.கு:
1) இது உங்கள் இடுகையிலுள்ள பின்னூட்டப் பெயர்களை மட்டுமே சரியாகக் காட்டும். ப்ளாக்கர் பின்னூட்டப் பெட்டியில் சரி செய்ய இயலாது.
2) இது ஒரு தற்காலிக தீர்வே. இப் பிரச்சனையை ப்ளாக்கர் சரி செய்துவிட்டால் தேவைப்படாது.
3) இந்த நிரல் ஒருங்குறியி்லுள்ள எல்லா மொழிகளுக்குமானதல்ல. தமிழுக்கு மட்டுமே சரியாய் செயல்படும்.

34 கருத்து(க்கள்):

சேதுக்கரசி |

நிறைய பேர் பதிவில் இந்தப் பிரச்சினையைப் பார்த்திருக்கேன் :)


ரவி |

உருப்புடியான விஷயம்....இட்லிவடை மூலம் வந்தேன், இங்கெ....

நல்ல முயற்சி, நன்றி !!!!


தகடூர் கோபி(Gopi) |

சேதுக்கரசி/செந்தழல் ரவி,

நானும் இதை பல வலைப்பதிவுகளில் பார்த்திருக்கிறேன். ஆனால் அப்போதெல்லாம் அதை சரி செய்ய யோசிக்கவில்லை.

எதுவுமே நமக்கு வந்தாத்தானே தெரியுது... (அது வேற ஒன்னுமில்லை. நேத்து தான் புது ப்ளாக்கருக்கு மாறினேன்) :)))

அட இன்னோரு விசயம் பாருங்க... இதை ஒரு மாற்றியா கூட எழுதிக்கலாம். பல சமயம் Yahoo போன்ற மின்னஞ்சல்களில் தமிழ் எழுத்துக்கள் இந்த மாதிரி accentedஆக மாறி வந்துவிடுகிறது. அந்த மின்னஞ்சல்களை மாற்ற இதே நிரல்த் துண்டை பயன்படுத்தலாம்.


வடுவூர் குமார் |

கோபி
இதெல்லாம் எப்படி கண்டுபிடிக்கிறீர்கள்?
ஏங்க வலைப்பூ வார்ப்புருவை பிச்சி பிச்சி போட்டு எங்கள மாதிரி ஆளுங்களுக்கு கொஞ்சம் பால பாடம் எடுங்களேன்.
கொஞ்சம் கத்துக்கிறோம்.
எங்க கையை வைச்சா என்ன நடக்கும் என்று தெரிந்துகொள்ளலாம் அல்லவா?


தகடூர் கோபி(Gopi) |

வடுவூர் குமார்,

கீழ்க்கண்ட சுட்டிகளில் ப்ளாக்கர் வலைத்தளமே வார்ப்புருவைப் பற்றியும் உங்களுக்கேற்றவாறு மாற்றிக்கொள்வது பற்றியும் சொல்லியிருக்காங்க.

நேரம் கிடைக்கும் போது படிங்க:
Template Tags:
http://help.blogger.com/bin/topic.py?topic=8930
Blogger Hacks:
http://help.blogger.com/bin/topic.py?topic=8932

ஆனா இந்த நிரல்த்துண்டு பத்தியெல்லாம் அங்க இருக்காது. :)


க்ருபா |

ப்ரமாதம்! brilliant!

-க்ருபா


இராம்/Raam |

கோபி,

மிக்கநன்றி உங்களின் உதவிக்கு,

இதேப்போல் நானும் முயற்சி செய்து பார்த்தேன், வழக்கம்போலே ஹி ஹி :))


வெற்றி |

கோபி,
நல்ல தகவல். நன்றி. எனக்கு இச் சிக்கல் இல்லை. ஆனால் பலரின் பதிவுகளில் இச் சிக்கலைக் கண்டிருக்கிறேன். உங்களின் இத் தகவல் பலருக்கு உதவும் என நம்புகிறேன்.

நேரம் இருந்தால், சகோதரி பொன்ஸ் அவர்களின் தமிழ் வலைப்பதிவர் உதவிப்பக்கம் தளத்திலும் இத் தகவலைச் இணைக்குமாறு கேளுங்கள். இதனால் பலரும் பயன் பெற வாய்ப்புண்டு.


தகடூர் கோபி(Gopi) |

வெற்றி,

தமிழ் வலைப்பதிவர் உதவிப்பக்கம் தளத்தில் இத்தகவலை மறுபதிப்பு செய்யுமாறு அதன் பின்னூட்டத்தில் கேட்டுள்ளேன்.


விண்ணாணம் |

//வார்ப்புருவில் <$BlogCommentAuthor$> என்பதைத் தேடி//த் தேடி கண்டுபிடிக்க முடியவில்லை. சற்று விளப்பமாகச் சொன்னால் எங்களைப் போன்ற சுத்த சூனியங்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும்.


தகடூர் கோபி(Gopi) |

விண்ணாணம்,

பொதுவாக <$BlogCommentAuthor$> என்பது <BlogItemComments> என்ற Tagன் கீழே இருக்கும்.

உங்கள் வலைப்பதிவின் மீயுரை நிரலை கண்டபோது, உங்கள் வார்ப்புருவில் <dl id='comments-block'> என்ற Tagன் கீழே (இன்னும் சரியாக சொல்லப்போனால்

<dt class='comment-author' id='comment-<$BlogCommentNumber$>'>
<a name='comment-<$BlogCommentNumber$>'></a>
என்ற நிரலின் கீழே)இருக்கும் என்பது என் எண்ணம். தேடிப்பாருங்கள்.

இல்லையெனில் உங்கள் வார்ப்புருவை எனக்கு (இப்பதிவின் கீழே சுட்டியுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு) தனிமடல் அனுப்புங்கள். என்ன/எங்கே மாற்றம் செய்யவேண்டும் என சொல்கிறேன்.


Jay |

////வார்ப்புருவில் <$BlogCommentAuthor$> என்பதைத் தேடி//த் தேடி கண்டுபிடிக்க முடியவில்லை. சற்று விளப்பமாகச் சொன்னால் எங்களைப் போன்ற சுத்த சூனியங்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும்.//
Same problem here! :(


சேதுக்கரசி |

நம் மின்னஞ்சலில் இந்தப் பிரச்சினை வந்தால் அதை எவ்வாறு சரிசெய்து வாசிப்பது? நோட்பேடில் ஒட்டி, ANSI தெரிவு செய்து சேமித்துப் பின் திறந்து பார்த்தேன், அப்படியும் சரிசெய்யமுடியவில்லை.


தகடூர் கோபி(Gopi) |

விண்ணானம்/மயுரேசன்,

நீங்கள் இருவரும் புதிய ப்ளாக்கர் வார்ப்புரு பயன்படுத்துகிறீர்கள். நான் புதிய ப்ளாக்கருக்கு மாறிவிட்டாலும் இன்னும் பழைய ப்ளாக்கர் வார்ப்புருவையே பாவிக்கிறேன். எனவே புதிய ப்ளாக்கரில் பயன்படுத்தப்படும் Tag பற்றி அறிந்திருக்கவில்லை.

புதிய ப்ளாக்கர் வார்ப்புருவில் <$BlogCommentAuthor$>க்கு ஈடான Tag <data:comment.author/> எனத் தெரிந்து கொண்டேன். இதற்கு தேவையான மாற்றத்தை இப்பதிவில் சேர்த்துள்ளேன். பயன்படுத்திப் பார்த்துவிட்டு ஏதும் வழு ஏற்பட்டால் சொல்லுங்கள்.


தகடூர் கோபி(Gopi) |

சேதுக்கரசி,

மின்னஞ்சலில் இந்தப் பிரச்சினை வந்தால் அதை சரி செய்ய http://www.higopi.com/ucedit/Asc2Tamil.html மாற்றியில் வெட்டி ஒட்டி படிக்கலாம்.


Unknown |

நீங்கள் கூறியபடி வெட்டி ஒட்டினால் கீழுள்ளவாறு சொல்கிறது.
We were unable to save your template
Please correct the error below, and submit your template again.
Your template could not be parsed as it is not well-formed. Please make sure all XML elements are closed properly.
XML error message: The content of elements must consist of well-formed character data or markup.


தகடூர் கோபி(Gopi) |

சுல்தான்,

புது ப்ளாக்கர் வார்ப்புருவை நான் நிறுவவில்லை என்பதால் அதை சோதிக்க இயலவில்லை. நேரம் கிடைக்கும் போது புது ப்ளாக்கர் வார்ப்புருவை நிறுவி பின்னர் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்தால் இங்கே பதிக்கிறேன்.


பொன்ஸ்~~Poorna |

சுல்தான் சொல்லும் அதே பிரச்சனை என்னுடைய பதிவிலும் :(


கப்பி | Kappi |

நன்றி கோபி!


ஞானவெட்டியான் |

அன்பு கோபி,
மிக்க நன்றி ஐயா!!
"செவிக்கினிய பாடல்கள்" பதிவில் இதைப் பயன்படுத்தி சுட்ட முறுக்குகளைச் சரி செய்தாயிற்று.

நன்றி! நன்றி!! நன்றி!!!


தகடூர் கோபி(Gopi) |

ஞானவெட்டியான் ஐயா,

இது இப்போதைக்குத் தேவையான தற்காலிகத் தீர்வுங்க... ப்ளாக்கர் இதை சரி செய்துவிட்டால் எடுத்துவிடலாம்.


வன்னியன் |

சொன்னபடி செய்தேன்.
ஆனால் பின்னூட்டங்களை இட்டவரின் பெயர்கள் முற்றாக மறைந்து போய்விட்டனவே?
என்ன சிக்கல்?

http://padippathivuhal.blogspot.com/2007/01/blog-post_25.html
www.pooraayam.blogspot.com


கபீரன்பன் |

Where to paste this script.
// document.write(asc2uni('<$BlogCommentAuthor$>'))
//

When I replaced "$BlogCommentAuthor$" nothing changed. When I pasted it above the /HEAD tag also didnot yield any result.
Can you please guide me. Will it affect future entries also ?
Thanks


தகடூர் கோபி(Gopi) |

வன்னியன்,

எங்காவது ' (single quote) அல்லது ; (semicolon) போன்றவை விடுபட்டிருக்கும். இந்தப் பதிவில் உள்ள் நிரலை அப்படியே ஒற்றி ஒட்டுங்கள். அப்போதும் சரியாகவில்லையெனில் தனிமடல் இடுங்கள் சரி செய்துவிடலாம்.


தகடூர் கோபி(Gopi) |

கபீரன்பன்,

நீங்கள் பழைய வார்ப்புருவை பாவித்தால் <$BlogCommentAuthor$> என்பது <BlogItemComments> என்ற Tagன் கீழே இருக்கும். புதிய வார்ப்புரு எனில் இந்த Tag இருக்காது. எனவே நீங்கள் ஜெகத் சொல்லியுள்ள (இந்த இடுகையின் கடைசி பகுதியிலுள்ள சுட்டியை சொடுக்குங்கள்) நிரலைப் பயன்படுத்த வேண்டும்.

வரும் காலத்தில் ப்ளாக்கர் இதற்கு தீர்வு காணும் போது இந்நிரலை நீக்கிவிடலாம். நீக்காவிட்டாலும் பாதகமில்லை.


enRenRum-anbudan.BALA |

கோபி,
எப்படி இருக்கீங்க ? ரொம்ப நாளாச்சு என் வலைப்பதிவு பக்கம் வந்து ! நானும் தான் !

நானும் புது பிளாக்கருக்கு மாற வேண்டியதாப் போச்சு, உங்க ஸ்க்ரிப்டை முயற்சி பண்ணிட்டுச் சொல்றேன். குடும்ப வாழ்க்கை நல்லா போயிட்டிருக்குன்னு நம்பறேன். நன்றி.

எ.அ.பாலா

PS: Thanks for continuing to keep my blog's link :)


தகடூர் கோபி(Gopi) |

எ.அ.பாலா,

வணக்கம். நலம். நலமா?

நேரம் கிடைக்கும் போது வலைப்பதிவுகளை படிக்கிறேன். பெரும்பாலும் பின்னூட்டம் தான் இடுவதில்லை. :)

நிரலை முயற்சித்துப் பாருங்கள்.

பி.கு: "அக்கம் பக்கம்" சுட்டிகள் இந்நாட்களில் அவ்வளவு பயன்படாதெனினும் முன்பு வலைத்திரட்டிகள் இல்லாத காலத்தில் இப்படி ஒருவருக்கொருவர் சுட்டி தானே வருகையாளர்களால் அறியப்பட்டோம்.


Unknown |

Good work Gopi!


Muthu |

நன்றி கோபி...just now i did


அ. இரவிசங்கர் | A. Ravishankar |

இந்த ஜிலேபி வழு என் முழு wordpressஐயும் தாக்கி இருக்கிறது. உதவ முடியுமா?

பார்க்க - http://wordpress.org/support/topic/119943?replies#post-567089


ALIF AHAMED |

பின்னுட்டக்கள் இட்டவரின் பெயர் )) இப்படி காட்டுகிறது இதற்க்கு தீர்வு உண்டா...?


தகடூர் கோபி(Gopi) |

ரவிசங்கர்,

ப்ரச்சனையை தீர்த்து 'ஜிலேபி சாப்பிடுவது' பற்றி பதிவு போட்டிருக்கீங்க. சரியான சமயத்துல உங்களுக்கு உதவ முடியாதது குறித்து வருந்துகிறேன்.


தகடூர் கோபி(Gopi) |

மின்னுது மின்னல்,

உங்க வார்ப்புருவிலே

<script>document.write(to_unicode('<script>document.write(to_unicode('<$BlogCommentAuthor$>'))</script>'))</script>

என்று போட்டிருக்கீங்க போல இருக்கு. எதுக்குங்க ஒரு document.writeக்குள்ளே இன்னொரு document.write..?

அதை

<script>
document.write(asc2uni('<$BlogCommentAuthor$>'));
</script>

என்று மாற்றிப் பாருங்க. அப்படியும் சரிவரலைன்னா எனக்கு தனிமடல் இடுங்க.


அ. இரவிசங்கர் | A. Ravishankar |

ஐயோ வருந்த எல்லாம் வேண்டாங்க ! பிளாகர்ல பின்னூட்டப் பெயர் மட்டும் தான் ஜிலேபியாச்சு..ஆனா, இங்க பதிவு, கட்டளையாகம் எல்லாமே ஜிலேபிக் கடையாட்டம் ஆனதால கொஞ்சம் பதறிட்டேன். தீர்வு எளிமையா தான் இருந்தது. நன்றி