மொழிமாற்றிகள் 3.2 வெளியீடு
Google Buzz Logo

அனைவருக்கும் வணக்கம்.

தகடூர் தமிழ் மாற்றி மற்றும் இதர மொழி மாற்றிகளின் நிர‌லில் சில‌ மாற்ற‌ங்க‌ள் செய்து இந்த மாற்றிகளின் அடுத்த பதிப்பான 3.2  வெளியிடப்படுகிறது.

இந்த வெளியீட்டில் உள்ள புதிய‌ வ‌ச‌திகள்

  • பாமினி த‌ட்ட‌ச்சு ப‌ல‌கை - தமிழக அரசு அலுவலகங்களிலும் புலம்பெயர் தமிழர்களாலும் பெரிதும் பயன்படுத்தப்படும் பாமினி த‌ட்ட‌ச்சு அறிந்தோர் எளிதில் த‌ட்ட‌ச்சு செய்ய‌ வ‌ச‌தியாக‌ இந்த‌ பாமினி தட்டச்சுப் பலகையை தெரிவு செய்து கொள்ள‌லாம்.
  • வானவில் த‌ட்ட‌ச்சு ப‌ல‌கை - தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட வானவில் த‌ட்ட‌ச்சு அறிந்தோர் எளிதில் த‌ட்ட‌ச்சு செய்ய‌ வ‌ச‌தியாக‌ இந்த‌ வானவில் தட்டச்சுப் பலகையை தெரிவு செய்து கொள்ள‌லாம்.
  • தமிழ் மாடுலார் த‌ட்ட‌ச்சு ப‌ல‌கை - சில அச்சு ஊடக அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் தமிழ் மாடுலார் த‌ட்ட‌ச்சு அறிந்தோர் எளிதில் த‌ட்ட‌ச்சு செய்ய‌ வ‌ச‌தியாக‌ இந்த‌ தமிழ் மாடுலார் தட்டச்சுப் பலகையை தெரிவு செய்து கொள்ள‌லாம்.

மொழி மாற்றிகளின் சுட்டி:
இம்மாற்றிக்கான தமிழ் மாடுலார் விசைப்பலகை வரைபடம் மற்றும் விவரங்களை அளித்து உதவிய செல்வ.முரளிக்கு எனது நன்றி.

நிறை/குறை/யோசனைகள் வரவேற்கப்படுகின்றன

2 கருத்து(க்கள்):

செல்வமுரளி |

கோரிக்கையை ஏற்று உடனே செயல்படுத்தியமைக்கு மிக்க நன்றி அண்ணா


தகடூர் கோபி(Gopi) |

என்னது "உடனே"யா? இதானா சார் உங்க உடனே...

வெகு தாமதமாக மாடுலார் விசைப்பலகையை சேர்த்தாலும் பொறுமையோடு காத்திருந்தமைக்கு நன்றி