சொர்க்கத்துல கிரிக்கெட் உண்டா?
பிரபல கிரிக்கெட் வீரர்கள் ரெண்டு பேர் இருந்தாங்க (டெண்டுல்கர், கங்குலின்னு வச்சுக்குவமே அவங்களுக்கு ஆட்சேபனையில்லைன்னா). அவங்களுக்கு சொர்க்கத்துல கிரிக்கெட் மேட்ச் உண்டா இல்லையாங்கிற தீராத சந்தேகம் ஒன்னு இருந்தது. சரின்னு ரெண்டு பேர்ல யாரு மொதல்ல செத்தாலும் சொர்க்கத்துக்கு போய் அங்க கிரிக்கெட் உண்டான்னு பர்த்துட்டு ஆவியா வந்து மத்தவர் கிட்ட சொல்லனும்னு ஒரு ஒப்பந்தம் பண்ணாங்க.
வயசானப்புறம் டெண்டுல்கர் மொதல்ல செத்துப்போய் சொர்க்கத்துக்கு போனார்.
கொஞ்சநாள் கழிச்சி ஒரு நாள் கங்குலி பார்க்ல ஒக்கந்துகிட்டு இருந்தப்ப "சௌரவ்! சௌரவ்!" அப்பிடின்னு கொரல் கேட்டுச்சி திரும்பிப் பாத்தா திடீர்னு டெண்டுல்கர் ஆவியா அங்க நின்னுக்கிட்டிருந்தார்.
சந்தோஷத்துல கங்குலி அவரைப் பாத்து "சொர்க்கத்துல கிரிக்கெட் உண்டா?"ன்னு கேட்டார்.
டெண்டுல்கர் அதுக்கு அமைதியா அவரைப்பாத்து "உனக்கு ஒரு நல்ல சேதி, ஒரு கெட்ட சேதி"ன்னு சொன்னார்.
கங்குலி "சரி மொதல்ல நல்ல விஷயத்தச் சொல்லு"ன்னாரு
"சொர்கத்துல கிரிக்கெட் இருக்கு" அப்பிடின்னாரு டெண்டுல்கர்.
"சூப்பர். இந்த சந்தோஷத்த எந்த கெட்ட சேதியும் கெடுக்க முடியாது. அது என்ன கெட்ட சேதி"ன்னாரு கங்குலி
"வர்ற வெள்ளிக்கெழமை சொர்க்கத்துக்கு நரகத்துக்கும் நடக்ற ஒன்டேல நீதான் சொர்க்கத்து சார்புல ஓபனிங்கு பேட்ஸ்மேன்"ன்னாரு டெண்டுல்கர்.
2 கருத்து(க்கள்):
நக்மா இருப்பாங்களா மாட்டாங்களா?டெண்டுல்கர் இல்லாம ஐசிசி டிராபி பாக்கவே பிடிக்கல...
மணிக்கு கோபி சொன்னது...
னம்ம டால்மியா பண்றதயெல்லாம் பாத்தா வரவர கிரிகெட்டே பிடிக்கமாட்டேங்குதுங்க தங்கம்
நீங்க சொல்லுங்க