இந்திய சுங்கவரி - சில குறிப்புகள்
நீங்கள் வெளிநாட்டில் வசிப்பவரா? இந்தியாவுக்கு வருகிறீர்களா? இந்திய சுங்கவரி குறித்து உங்களுக்கு உபயோகமான சில குறிப்புகள் இங்கே
இப்போதுள்ள சுங்கவரி விதிகளின்படி:
1) வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்பும் ஒவ்வொரு பயனியும் ஒரு லாப்டாப் (நோட்புக் கணினி) தங்களோடு சுங்கவரி செலுத்தாமல் எடுத்து வரலாம்
2) ஒவ்வொரு பயனியும் தன்னோடு ரூ. 25,000 வரை மதிப்புள்ள பொருள்களை சுங்கவரி செலுத்தாமல் எடுத்து வரலாம். மேற்கொண்டு எடுத்துவரும் பொருள்களின் மதிப்பில் 40% வரி செலுத்த வேண்டும்
(உ.ம்: உங்கள் பேகேஜில் உள்ள ஒரே பொருள் ரூ 50,000 மதிப்புள்ள ஒரு காமிரா என்று வைத்துக்கொள்வோம், நீங்கள் செலுத்த வேண்டிய சுங்கவரி ரூ. 10,000 (5,0000 - 25,000) X 40/100 = 10,000 )
3) தங்கம் கொண்டுவருபவர்கள் 10 கிராமுக்கு ரூ 250 வீதம் சுங்கவரி செலுத்தி ஒரு பயனிக்கு 10 கிலோ வரை எடுத்துவரலாம்
4) மும்பை, கொல்கத்தா விமான நிலையங்களைவிட சென்னை விமான நிலையத்தில் கெடுபிடிகள் குறைவு. (அடிக்கடி CBI ரெய்டு நடப்பதும் ஒரு காரணம்) காரணமில்லாமல் லஞ்சம் கேட்டால் கொடுத்துவிட்டு பொருள்கள் உங்களிடம் வந்து அடைந்த பின் CBI ஐ அனுகலாம்
5) தாய்லாந்து/அமெரிக்கா மற்றும் இன்னும் சில நாடுகளில் நீங்கள் வாங்கிய பொருள்களுக்கு மதிப்பு கூட்டு வரி (VAT) செலுத்தியிருந்தால், 6 மாதத்துக்கும் குறைவாக அந்நாட்டில் தங்கியிருந்திருந்தால, கிளம்பும்போது அந்நாட்டு விமான நிலையங்களில் அந்தத் தொகையை திரும்ப பெற்றுக்கொள்ளலாம், விபரங்களுக்கு அந்தந்த விமான நிலையத்தில் விசாரிக்கவும்
இன்னும் பல விபரங்களுக்கு கீழேயிள்ள சுட்டிகளைப் பார்க்கவும்:
http://www.geocities.com/indiancustoms/
http://www.cbec.gov.in/
7 கருத்து(க்கள்):
மணிக்கு அன்பு சொன்னது...
தகவலுக்கு நன்றி கோபி. இந்த லின்ங்கை கொஞ்சநாளாகவே தேடிவந்தேன்.
ஹீம்... பயனிகள் அல்லது பயணிகள் - ஒருவேளை consumer என்றவகையில் பயனி-யாகிவிட்டாரோ!
மணிக்கு சாகரன் சொன்னது...
நல்ல தகவல் கோபி ... நன்றி!
மணிக்கு கோபி சொன்னது...
அட! பயனின்னு படிச்சாலும் அர்த்தம் வருது இல்ல..
கலக்கீட்டிங்க அன்பு.
(எழுத்துப் பிழை அப்படியே இருக்கட்டும் விடுங்க)
மணிக்கு muthu சொன்னது...
சுபெர்
மணிக்கு Ranjan சொன்னது...
ரொம்ப உபயோகம இருந்தது. நன்றி நன்றி நல்லவரே...
மணிக்கு கோபி சொன்னது...
ஏப்பு ரஞ்சன்! லண்டன்லருந்து வர்ரையில என்ன வாங்கியாரிக?
மணிக்கு venkatesan சொன்னது...
§¸¡À¢ «Å÷¸ÙìÌ
Á¢ì¸ ¿ýÈ¢.¿¡ý º¢í¸ôââø ¯û§Çý.´ù¦Å¡Õ¾¼¨ÅÔõ ¦ºý¨É ÅÕõ §À¡Ð þó¾ ¿¢¨ÉôÒ¾¡ý.
¿øÄ ¾¸Åø¾¡ý.
நீங்க சொல்லுங்க