பிள்ளையார் டான்ஸ் ஆடிய கதை
முன்னொரு காலத்துல மூனு மீனவ நண்பர்களிருந்தாங்க. எல்லாரும் சேர்ந்து ஒரு நாள் கடல்ல மீன் பிடிக்கலாம்னு போனங்க. இதுல பாத்தீங்கன்னா ஒருத்தர் இந்து ஒருத்தர் முஸ்லீம் ஒருத்தர் கிருஸ்தவர். தூரமா போய் மீன் புடிக்கும்போது கடல்ல திடீர்னு புயல் வந்துருச்சி. கிறிஸ்தவர் "கர்த்தரே காப்பீர்"னு சொன்ன உடனே ஏசு வந்து அவரை காப்பாத்திட்டாரு. முஸ்லீம் "அல்லாவே அருள்"னு சொன்ன உடனே அல்லா வந்து அவரை காப்பாத்திட்டாரு. இந்துக்கு யாரைக்கூப்பிடனும்னு கொழப்பம் வந்துடுச்சி. கடைசியா முடிவு பண்ணி. "புள்ளையாரப்பா! நான் புள்ளகுட்டிக்காரன் என்னிய காப்பாத்து உனுக்கு 108 தேங்கா ஒடைக்றேன்"ன்னான். புள்ளையாரு வந்தாரு. ஆனா அவனை காப்பாத்த்றதுக்கு பதிலா, கடற்கரைல நின்னுகிட்டு "எத்தினி தபா என்னிய முழுகவுட்டு நீ டான்ஸ் ஆடியிருப்ப! இப்ப நீ முழுகு. நான் டான்ஸ் ஆடுறேன்"னு சொல்லி டான்ஸ் ஆடிட்டு போய்ட்டாரு
இந்த கதைய நம்ம முக்கிய பிரமுகருங்க(அவங்கல்ல பலபேர் அரசு சொத்தை அமுக்கியதால "அமுக்கிய பிரமுகர்"னு இல்ல கூப்பிடனும்) சில பேர் கிட்ட சொன்னா அவங்க எப்படி ரியாக்ட் பண்ணறாங்கன்னு பாக்கலாம்
சுப்ரமண்யசாமி: இது திட்டமிட்ட சதி. கோபிங்கற பேர்ல இந்தக் கதைய சொன்னது ஒரு இந்துவே இல்லை. போன வாரம் ஏசுவ நான் டீ பார்டிக்கு கூப்பிட போனப்ப அவர் கூட இதைத்தான் சொன்னாரு. வர்ற பிப்ரவரி 31 அன்னிக்கி இத நான் ப்ரூவ் பண்ணுவன்
தொல்.திருமாவளவன்: மீனவர் என்றாலே தலித். ஒரு கதையில் கூட தலித் நண்பன் மூழ்குவதை எங்களால் ஏற்றுகொள்ள முடியாது. இதை எதிர்த்து போராட மரவெட்டி ஐயா மற்றும் சிலருடன் விவாதித்து முடிவு செய்வோம்
மரவெட்டி ஐயா: இந்தக் கதை சொல்வதற்கு முன் எங்களிடம் கோபி முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும். எங்கள் தொண்டர்கள் இந்த கதை எழுதப்பட்ட வெப்சைட்டை அழிப்பார்கள். இதை செயல்படுத்த ஒரு கமிட்டி அமைக்கப்படும் அதற்கு அன்புமணி தலைமை தாங்க வேண்டும் இதெல்லாம் கட்சி பொதுக்குழு செயற்குழு கூடி எடுத்த முடிவு
இ.மு இராமகோபாலன்: இதை எழுதியவரின் பெயரில் என் பெயரிலுள்ள "கோ" இருப்பதற்காக வெக்கப்படுறேன். இந்துக்களை காக்க வேணாம். இது போன்ற கதை எழுதுற ஆளுங்களை முஸ்லீம்களோட நாட்டுல இருந்தா நாடு கடத்தி இருப்பாங்க. இது குறித்து அன்பு சகோதரி ஜெயாவுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கேன்.
கழகத்தின் காவல்தெய்வம்: உங்கள் சகோதரியின் பொன்னாட்சியிலே இது நடந்தது மிக வருந்தத்தக்கது. அந்த இந்து மீனவ குடும்பத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன். ரு. 1 லட்சம் நிவாரண நிதி வழங்குவதற்கு உத்தரவிட்டுள்ளேன். இதுபோல எழுதுபவர்களை தடுக்க "கட்டாய எழுத்து தடுப்பு சட்டம்" கொண்டு வரப்படும்.
முத்தமிழ் காவலர்: உடன்பிறப்பே, நமது மீனவ நண்பன் மூழ்கியது வருந்தத்தக்கது. ஆனால் அவனை தேடி கண்டுபிடிக்காமல் அவன் இறந்துவிட்டதாக கூறி நிதியுதவி அளிப்பதாக நாடகமாடியிருக்கிறார் இந்த அம்மையார். மதச்சார்பற்ற நமது கழக ஆட்சி நடந்த போது இப்படியெல்லாம் நடந்ததா? இந்தக் கூத்தையெல்லாம் பார்த்துக்கொண்டு சும்மாயிருக்க தமிழக மக்களொன்றும் சொற்றாலடித்த் பிண்டங்களல்ல.சிறுபான்மை முஸ்லீம்களுக்கு எதிரான இந்த ஆட்சியை அகற்றும் மக்களின் முயற்சிக்கு தோள் கொடுக்க வெகுன்டெழுந்து வாராய்.
7 கருத்து(க்கள்):
மணிக்கு காசி சொன்னது...
நல்லாருக்கு கற்பனை. போட்டோவெல்லாம் போட்டிருக்கே, பாத்து ஆட்டோ வரபோக்குது.
(ஏன் எழுதெல்லாம் இத்தனை சின்னதா இருக்கு?)
மணிக்கு Moorthi சொன்னது...
வித்தியாசமான சிந்தனை! கோபி அண்ணா கலக்கிட்டீங்க. வினாயகர் சதுர்த்தியன்று பிள்ளையார் மூழ்குவதனை சுட்டிக்காட்ட தாங்கள் பயன்படுத்திய கதை அருமை! பாத்துங்க... அண்ணா சொன்ன மாதிரி ஆட்டோ வந்துடப் போகுது!
மணிக்கு KVR சொன்னது...
நல்லா இருக்கு கோபி. இவங்க கூட நம்ம வருங்கால(!!) முதல்வர் விஜயகாந்த், ரஜினிகாந்த் சொல்றதையும் போட்டிருக்கலாமே :-)
கண்ணு நல்லா தெரியிற எனக்கே உங்க கட்டுரை படிக்க கஷ்டமா இருக்கு. எழுத்தை கொஞ்சம் பெரிசாக்குங்க சார்
மணிக்கு Ranjan சொன்னது...
Nalla iruku unga karpanai
மணிக்கு தங்கம் சொன்னது...
நல்லாருக்கு. நம்ம லாலு சென்னை வந்திருக்கார். அவர்கிட்டயும் ஒரு வார்த்தை கேளுங்க...
மணிக்கு கோபி சொன்னது...
/பாத்து ஆட்டோ வரபோக்குது/
நமக்கெல்லாம் ஆட்டோ அனுப்ற அளவுக்கு அவுங்களுக்கேதுங்கண்ணா நேரம். அவங்கள்ளாம் இப்ப எதை அமுக்கலாம், சட்டசபை தேர்தல்ல எத்தை அமுக்கலாம்னு யோசிக்றதுக்கே டைம் பத்தாது
/ஏன் எழுதெல்லாம் இத்தனை சின்னதா இருக்கு?/
பெரிசு பண்ணிட்டெனுங்கண்ணா.
/விஜயகாந்த், ரஜினிகாந்த்/
இவங்க எத்தையாவது அமுக்கிய பிரமுகர் ஆவட்டும் குப்ஸூ அப்பால பேசிக்கலாம்
லாலு கிட்ட கேட்டாக்க ப்ளாஸ்டிக்ல போட் விட்டதாலதான் முழுகிடிச்சி அதனால இனிமே எல்லாரும் மண்ல செஞ்ச போட் தான் விடனும்னு சொல்றாரு
மணிக்கு Karthik Kumar சொன்னது...
சரியான நக்கல் ! கலக்கி புட்டீங்க.
நீங்க சொல்லுங்க