வலைப்பூ - பூச்சரம் - 1
Google Buzz Logo

வில்லுப் பாடகர்: தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லினில் பாட ஆமா! வில்லினில் பாட ..

வலைப்பதிவாளர் சமூகத்திலே சமீபத்தில் பூத்த சில மலர்கள் பற்றி இன்றைய வில்லுப்பாட்டுல பேசப் போறோம்.

குழு:ஆமா!

வில்லுப் பாடகர்: வெண்பாப் பதிவுல சொ. மணியன் அவருக்கு தெரிந்த உலகத்தை அவருக்கு தெரிந்த வெண்பாவுல சொல்லுறாரு. வலைப்பதிவுலகத்தில இது ஒரு புது மாதிரி முயற்சி!

குழு:ஓஹோ!

வில்லுப் பாடகர்: குட்டிக் கதைகள்ல ந. உதயகுமார் சின்னச் சின்ன நீதிக்கதைகளை சொல்லி வருகிறார். குழந்தைகளோட படிக்கனும் நாமெல்லாம்!

குழு:ஆமா!

வில்லுப் பாடகர்: ஒரு மாசமா சிக்கல் செஞ்சுக்கிட்டு இருக்கிற montresor (அப்படின்னா என்னங்க?) சில சமயங்கள்ல (அந்துமணியின் முட்டாள்தனமான வாரமலர் உளறல்கள் நாளுக்குநாள் அதிகமாகிக்கொண்டே போகிறது.) சூடான விவாதத்துக்கான சிக்கலை ஏற்படுத்துறாரு

குழு:அப்படியா!

வில்லுப் பாடகர்: கோமானின் எழுத்துக்கள்ல தன்னோட தாத்தா எழுதிய கட்டுரைகளை எழுத்து மாறாம பதித்துள்ள கோமான், திவ்விய பிரபந்தம்லயும் கலக்கியிருக்காரு. இலக்கிய ஆர்வமுள்ளவங்க எல்லாருக்கும் ஒரு விருந்து

குழு:ஆமா!

வில்லுப் பாடகர்: கனாக் காணுங்கள்னு சொல்லி கவிதைகளை பதிச்சிகிட்டு இருக்கிறாரு "புதிய கனா". புலத்தில் ஆவணப்படுத்தப்படாமல் உள்ள படைப்புக்களை அடையாளங்காண்பதும் முடிகிறபோது பதிப்பிக்க முனைவதையும், நோக்கமாகக் கொண்டது 'கனா' என்கிறாரு.

குழு:ஓஹோ!

வில்லுப் பாடகர்:
நியூக்ளியஸ் வலைப்பதிவு உருவாக்குவதெப்படி?ன்னு நிகழ்வுகள் சொல்லித் தருது.

குழு:பிரமாதம்!

வில்லுப் பாடகர் & குழு:இந்த புதுப் பூக்களை வரவேற்று நல்ல ஒரு வில்லுப்பாட்டு பாடலாம் எல்லாரும் சேந்து பாடுங்க ... தரிகிட தரிகிட தோம்... தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லினில் பாட ஆமா! வில்லினில் பாட .....


அப்பாடா! ஒரு வழியா ப்ருந்தாவனத்துல இத்தோட சேத்து அரை சதம் (50 பதிவுகள்) அடிச்சாச்சி

5 கருத்து(க்கள்):

பெயரில்லா |

மணிக்கு Chandravathanaa சொன்னது...

vaalththukkal

natpudan
chandravathanaa


பெயரில்லா |

மணிக்கு அன்பு சொன்னது...

ஆஹா அருமையான வடிவத்தில் அறிமுகம்...

வலைப்பதிவாளர்கள்: ஆமா...!

50 வெறும் எண்ணிக்கைக்கல்ல... ஐம்பதும் விஷயத்துடன் என்பது தனிச்சிறப்பு. வாழ்த்துக்கள் கோபி.


பெயரில்லா |

மணிக்கு மூர்த்தி சொன்னது...

ஒவ்வொரு பதிவும் உங்களின் எழுத்துலக வெற்றிப் பயணத்தின் படிக்கற்கள். இன்னும் சிறப்பாக நல்ல பல பதிவுகளைக் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. வாழ்த்துக்கள் கோபி.


பெயரில்லா |

மணிக்கு கோபி சொன்னது...

வாழ்த்துக்களுக்கு நன்றிங்க Chandravathanaa, அன்பு, மூர்த்தி


பெயரில்லா |

மணிக்கு துளசி கோபால் சொன்னது...

கோபி, ஜமாய்ச்சுட்டீங்க!
50 பதிவுமே அழகா வந்திருக்கு!
வாழ்த்துக்கள்.

இன்னும் ஒரு 10000 சதங்கள்
போடுணும்!