வலைப்பூ - மனமென்னும் மாயாஜாலம் - 3
Google Buzz Logo

ஜோதியில் போகி

குற்ற உணர்வா இருக்கா? தப்பு செஞ்சுட்டம்னு தோனுதா, அப்படி செஞ்சிருக்க கூடாதுன்னு தோனுதா?

இதிலிருந்து விடுபட இன்னிக்கு நாம கத்துக்கப் போறது எளிய முறை தியானம்

காற்று பலமா வீசாத அறையில சுகாசனத்துல(சப்பனமிட்டு) உக்காருங்க. எதிர்ல ஒரு விளக்கையோ மெழுகுவர்த்தியையோ ஏத்தி வையுங்க. கொஞ்ச நேரம் எரியும் ஜோதியைப் பாருங்க! அந்த வெளிர்மஞ்சள் நிறம், அதனுள் ஆரஞ்சு நிறம், இன்னும் உள்ளே சற்று வெளிர் நிறப் புள்ளி அதனுள் திரியின் கருமை அதன் கீழே நீல நிற அடிப்புறம். ஆஹா! இந்த சிறு சுடர்தான் எத்தனை அழகு! அப்பப்பா!

சரி இப்ப லேசா கண்ணை மூடுங்க. நீங்க கொஞ்ச நேரம் முன்னாடி ரசிச்ச சுடரின் பிம்பம் இப்ப தெரியுதா? நீங்க செஞ்ச தவறுன்னு நெனச்சிக்கிட்டு இருக்கும் விசயத்தை ஒரு பேப்பரில் எழுதி அந்த பிம்பத்தில் போடுவதாக கற்பனை செய்யுங்க!

உங்க கற்பனையில் அந்த பேப்பர் கொஞ்சம் கொஞ்சமா சுடரில் கரைந்து மறையும். வ்விஷ்ஷ்.... அவ்வளவுதான் நீங்க செஞ்ச அந்த தப்பு மறைஞ்சி போச்சு! இப்படி உங்க குற்ற உணர்வுக்கு காரணமான எல்லா தப்பையும் மறைய வைய்யுங்க.

எல்லாம் முடிஞ்சதா! இப்ப கண்ணை திறங்க! சுடர் அனைந்திடாவிட்டால் அனைத்துவிட்டு அறையை விட்டு வெளிய வாங்க. இப்ப நீங்க செஞ்ச தப்பெல்லாம் உங்களை விட்டு போயாச்சி!

என்ன நம்பமுடியலையா? செஞ்சி பாருங்க

நல்லதை சந்தேகப்படாதீங்க! கெட்டதை சந்தேகப்படுங்க

3 கருத்து(க்கள்):

பெயரில்லா |

மணிக்கு அன்பு சொன்னது...

கண்டிப்பா செஞ்சுபார்க்கிறேங்க. ஆனா ஒரு சந்தேகம் சாரி சாரி டவுட், இத ஒருநாளைக்கு எத்தனை முறை பண்ணனும்!? (இந்த மாதிரி விஷயங்களை இப்படி பொதுவுல சத்தமா சொல்லாதீங்க, பலரும் சிகரெட் பாக்கெட்மாதிரி மெழுகுவர்த்தி பாக்கெட்டையும் பையில வச்சுட்டு அலைய போறாங்க:)


பெயரில்லா |

மணிக்கு கோபி சொன்னது...

எப்போதெல்லாம் குற்றம் செய்ததாய் உணர்கிறீர்களோ (குற்ற உணர்வு உங்களை வேறு வேலை செய்யவிடாமல் தடுக்கும் போது) அப்போதெல்லாம் இந்த எளிய பயிற்சியைச் செய்யலாம்.

சில மதங்களிலிருக்கும் பாவமன்னிப்பு போன்ற அரிய கோட்பாடுகள் எல்லா மதத்திலும் இல்லையென்பதால் இந்த எளிய பயிற்சி


பெயரில்லா |

மணிக்கு Positive RAMA சொன்னது...

நிறையபேர் புண் பட்ட மணதிற்கு புகை விட்டு ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் சற்று திரும்பி கோபியின் பயிற்சியை செய்து பார்க்கலாம்.