வலைப்பூ - நன்றி சொல்லவே
Google Buzz Logo

என்னை வலைப்பூ ஆசிரியப்பணிக்கு தேர்ந்தெடுத்த மதி அவர்களுக்கும் இந்த வார நட்சத்திரமாய் தேர்ந்தெடுத்த தமிழ்மணம் குழுவினருக்கும் முதற்கண் எனது நன்றி!

கடந்த ஒரு வாரத்திலே இந்த ஆபீஸ்பாய் செய்த அலம்பல்களை பொறுமையோடு படித்துப் பார்த்து ரசித்த, பின்னூட்டமளித்து ஊக்கப்படுத்திய, மின்னஞ்சல் அனுப்பி யோசனைகளைத் தெரிவித்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பயாஸ்கோப் நன்றி!

காசி ஃப்ளாஸ்க் கொடுத்துக் கேட்ட நம்ம ஊர் காப்பிக்காக காப்பித்தூள், பால், சர்க்கரை எல்லாம் வாங்கி வெச்சிருக்கேன். காப்பி போட்டு எடுத்துட்டு போகனும்!

இன்னும் ஏகப்பட்ட வேலை இருக்குதுங்க! வரட்டுங்களா? (உக்கும்! என்னமோ தலையில உலகத்தையே தாங்குற மாதிரி இந்த ஆபீஸ்பாய்க்கு ஏத்தத்தைப் பாரு!)

அப்பப்ப இந்த ஆபீஸ்பாய்க்கு மின்னஞ்சல் அனுப்புங்க, இங்க வந்து பாத்து பின்னூட்டம் குடுத்து உற்சாகப்படுத்துங்க

விளையாட்டம்மை ஒரு முறை வந்தால் அந்த தழும்புகளின் அடியிலேயே வைரஸ் தங்கிவிடுமாம் அதுபோல விளையாட்டாய் எழுத ஆரம்பித்த நான், உங்கள் அடி மனதில் இடம் கிடைத்தால்

தங்கி, தொடர்கிறேன் .....

11 கருத்து(க்கள்):

பெயரில்லா |

மணிக்கு சீனு.. சொன்னது...

கோபால்..

தமிழ் உலகிற்கு உன் சேவை என்றும் தொடர என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

என்றும் அன்புடன்...
சீனு..


பெயரில்லா |

மணிக்கு துளசி கோபால் சொன்னது...

அன்புள்ள கோபி,

கொன்னுட்டீங்க!!! முடிச்ச விதமும் அட்டகாசமா இருக்கு!!!

சினிமா பாக்குற அனுபவம் கிடைச்சது!

நல்லா இருங்க! வாழ்த்துக்கள்!!!

என்றும் அன்புடன்,
துளசி கோபால்

பி.கு: உங்க பேரு கோபாலா?


பெயரில்லா |

மணிக்கு mayavarathaan சொன்னது...

வலைப்பூ - அம்புட்டுதேன்...! - தலைப்ப பார்த்துட்டு அதிர்ச்சியாகிட்டேன் அண்ணாத்தே...! தயவு செஞ்சு தலைப்பை மாத்துங்க! 'வலைப்பூ' அம்புட்டுதேன் மாதிரி அர்த்தம் வருது!


பெயரில்லா |

மணிக்கு suresh சொன்னது...

நல்ல வாரம் கோபி.. வாழ்த்துக்கள்.


பெயரில்லா |

மணிக்கு கிறிஸ்டோபர் சொன்னது...

கோபி, ஒரு வாரம் போனதே தெரியல. தினமும் அசராம எழுதினீங்க. உங்க எழுத்துல/சிந்தனையில நாவல்டி இருந்தது... வாழ்த்துக்கள்!


பெயரில்லா |

மணிக்கு அன்பு சொன்னது...

பாராட்டுக்கள் கோபி, மிக சிறப்பாக செய்தீர்கள். எழுத விஷயம் அதிகமில்லை என்று தன்னடக்கத்துடன் ஆரம்பித்து பல வகையிலும் பல எல்லையை தொட்டுள்ளீர்கள். வாழ்த்துக்கள், தொடர்ந்து எழுதுங்கள்.


பெயரில்லா |

மணிக்கு வீரமணி இளங்கோ சொன்னது...

கோபி,
கலக்கிட்டீங்க போங்க..நிறைய விஷயங்கள் எழுதினீர்கள்.அதுவும் உங்கள் கலக்கல் பாணியிலேயே.உங்கள் தமிழ்ப்பணி தொடர வாழ்த்துக்கள்.

நட்புடன்
வீரமணி இளங்கோ.


பெயரில்லா |

மணிக்கு கோபி சொன்னது...

துளசி கோபால்,

தாய் தந்தை எனக்கு வைத்த பெயர் கோபாலகிருஷ்னன். தாய்வழி உறவினரும் சில நண்பர்களும் அழைப்பது கோபி. தந்தை வழி உறவினர் (சீனு போல) அழைப்பது கோபால் (இதுல வேற எங்க பாட்டீ - தந்தையின் அம்மா ரொம்ப ராகமா கோஓஓபாஆஆல்லூஊஊ). இது தவிர கோபு, கிருஷ்ணா, கோப்ஸ், கோப்ளி, க்ருஷ் இப்படி பலவிதமா கூப்பிடும் போது ஞாபகம் வச்சிகிட்டு திரும்பிப் பாக்கறத்துக்கே மூளையில தனியா ஒரு டேட்டாபேஸ் வச்சிக்கனும் :-)

மாயவரத்தான்,

ஐய்யைய்யோ! தப்பு நடந்து போச்சிங்க எஜமான் தப்பு நடந்து போச்சி! தலைப்புல அப்படி ஒரு அர்த்தம் எனக்கு அப்ப வெளங்கலீங்க (மரமண்டைக்கு இப்பத்தானுங்க எட்டிச்சி) ஒடனே மாத்திட்டனுங்க.

தவறுக்கு மன்னிக்க!

எல்லோருக்கும் நன்றி!


பெயரில்லா |

மணிக்கு பாலாஜி-பாரி சொன்னது...

கோபி,
நல்லா எழுது இருக்கீங்க. ஒரு வாரப்பத்ரிகை (தரமான) உரிய அம்சங்கள் உங்கள் பதிவுல இருந்துது. சிலதுதான் படிச்சேன். இன்னும் சிலத படிச்சுட்டு அங்கே காமேண்ட் சொல்றன்.
வாழ்த்துக்கள்


பெயரில்லா |

மணிக்கு மூர்த்தி சொன்னது...

அன்பு உடன்பிறப்பே,

மிகவும் நல்ல,பயனுள்ள, வித்தியாசமான பதிவுகளை வழங்கினீர்கள். உங்களின் முடிவுரைகூட வித்தியாசம்!(தேட்டருல அந்தக் காலத்துல வணக்கம் போட்டதான் எந்திரிப்போம்!) உங்களின் எழுத்துலகப் பணி தொடரட்டும். வாழ்த்துக்களுடன்,
மூர்த்தி.


பெயரில்லா |

மணிக்கு Navan Bhagavathi சொன்னது...

பயாஸ்கோப் டைப்பில படமெல்லாம் காட்டுரீங்க. ம்ம். நடத்துங்க.

இந்த வார பதிவுகள் அனைத்தையும் இப்பம் தான் படிச்சு முடிச்சேன். ஜமாய்ச்சுட்டீங்க.

வாழ்த்துக்கள் கோபி.