தகடூர் யுனிகோட் தமிழ் தட்டெழுத்துப் பெட்டி
Google Buzz Logo

தமிழ் கூறும் நல்லுலகுக்கு வணக்கம்.

சுரதா அவர்களின் புதுவைத் தமிழ் எழுத்து மாற்றி போல தமிழ் மற்றும் பிற மொழிகளுக்கான எழுத்து மாற்றியை உருவாக்க வேண்டும் என்று எண்ணினேன். எனது எண்ணத்தை செயலாக்க, சுரதா அவர்களுக்கு பொங்கு தமிழ் அடிப்படையைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி கோரி மின்னஞ்சல் அனுப்பினேன்.

ஏறகுறைய அவரின் "புதுவைத் தமிழ்" போலவே தோன்றினாலும் ஆட்சேபம் செய்யாமல் தாராள மனதோடு அவரின் பொங்கு தமிழ் JavaScript அடிப்படையைப் பயன்படுத்த அனுமதி கொடுத்ததோடு என்னை உற்சாகப்படுத்தி அவ்வப்போது இந்த எழுத்து மாற்றியை மேம்படுத்த யோசனைகளை மின்னஞ்சல் மூலம் தெரிவித்து எனக்காக அவர் எடுத்து வரும் சிரத்தை வியக்க வைக்கிறது.

சுரதா அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவிக்க, கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய தமிழில் பொருத்தமான வார்த்தை கிடைக்கவில்லை.

தமிழுடன்,இந்தி மற்றும் தெலுங்கு எழுத்து மாற்றிகளும் தயார். மலையாளம் மற்றும் கன்னடத்தில் இந்த எழுத்து மாற்றியைத் தயாரிக்க எண்ணியுள்ளேன்

எனக்கென்று இணையத்தில் சொந்தப் பட்டா நிலம் இல்லாததால் இதை சென்னை சஞ்சார் நெட் இணைய நிறுவனத்தின் இணையதளத்தில் எனக்களிக்கப்பட்ட இடத்தில் நிறுவியுள்ளேன். இதனால் எழுத்து மாற்றிப் பக்கம் பதிவிறங்க சற்று நேரம் ஆகிறது. தாமதத்தைக் களைய என்னாலானதை கூடிய விரைவில் செய்கிறேன்

தகடூர் எழுத்து மாற்றியின் சுட்டி:

http://chennai.sancharnet.in/tgkrishna/ucedit/

நிறை/குறை/யோசனைகளை எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்

17 கருத்து(க்கள்):

பெயரில்லா |

மணிக்கு KVR சொன்னது...

அருமையா இருக்கு கோபி. எடிட்டர்ல F12 அழுத்தினா ஒரு ஸ்பேஸ் வருதே, அது ஏன்னு பாருங்க.


பெயரில்லா |

மணிக்கு கோபி சொன்னது...

KVR,

ஒவ்வொரு எழுத்தையும் ஒவ்வொரு முறையும் தமிழ் மாற்றம் செய்வதால், ஆங்கிலத்தையும் தமிழையும் பிரித்தறிய அந்த ஸ்பேஸ் தவிர்க்க முடியாத தேவையாய் இருக்கிறது (MARKER - unicode 001F) வேறுவழி ஏதும் கிடைக்குமா என யோசிக்கிறேன். நீங்களும் ஏதும் தெரிந்தால் சொல்லுங்கள்


பெயரில்லா |

மணிக்கு அன்பு சொன்னது...

கோபி சார்,

உங்களுக்கு இதுபோல வேறெனென்ன கலைகள் தெரியும்?

அருமையாக இருக்கிறது. தமிழில் அடிப்பது மிக, மிக வேகமாக வருகிறது, எளிதாக
இருக்கிறது.

அலுவலகத்தில் உள்ள தெலுங்கு/ஹிந்தி நண்பர்களிடம் சுட்டி அனுப்பி முயற்சி
செய்துபார்க்கச் சொன்னேன். ரோமனைஸ்ட் தொழில்நுட்பத்தைப் பார்த்து
வாயடைத்து நிற்கின்றனர். நோட்பேடில் வெட்டி, ஒட்டினால் தெரிவதே
அதிசயமாயிருக்கிறது. மின்னஞ்சலில் முயற்சி செய்து பார்த்து வருகிறார்கள்.
மேலும் தகவல் பிறகு.

வாழ்த்துக்கள். முடிந்தால் கீமேப்புடன், e-kalappai போன்று
இணைக்கமுடியுமா என்று யோசியுங்கள் - தெலுங்கு, ஹிந்திக்கு இது மிகவும்
புதிதாக இருக்கும்.


பெயரில்லா |

மணிக்கு காசி சொன்னது...

higopi-ஆ இல்ல highgopi-ஆ! நல்லா இருக்கு. இன்னும் பயன்படுத்திப் பார்த்து cஒல்றேன்


பெயரில்லா |

மணிக்கு கோபி சொன்னது...

நன்றி காசி,

அன்பு

எடிட்டர் என்ற சொல்லுக்கு பதில் நல்ல தமிழ் சொல் தேடிக்கொண்டிருந்தேன் உங்கள் குப்பையிலிருந்து "எழுத்து மாற்றி" என்ற சொல்லை உறுவி, இந்தப் பதிவை சற்று மாற்றிவிட்டேன் .


பெயரில்லா |

மணிக்கு அருள் சொன்னது...

வாழ்த்துக்கள் கோபி, நல்ல முயற்சி


பெயரில்லா |

மணிக்கு Mathy Kandasamy சொன்னது...

மலையாளத்திற்கும் விரைவில் செய்ய முடியுமென்றால் செய்யுங்கள் கோபி. ஒரு நண்பர் மலையாள வலைப்பதிவு பற்றி உதவி கேட்டிருக்கிறார்.

தனிமடல் இடுகிறேன்!

வாழ்த்துகள் கோபி.

-மதி


பெயரில்லா |

மணிக்கு பாலாஜி-பாரி சொன்னது...

கோபி இது நல்லா இருக்கு.
நீங்கள் செய்தது ஒரு மிகச்சரியான, மனம் உவந்த பாராட்டிற்குரிய செயல். அந்த மூண்று மாண்விகள் நம்மை இன்று உணர்வால் பிணைத்தனர்.


பெயரில்லா |

மணிக்கு நவன் பகவதி சொன்னது...

பஹுத் அச்சா. முபாரக் கோபிஜீ.

இந்த முயற்சிக்காக எத்தனை முறை பாராட்டினாலும் தகும். ஆனால் ஹிந்தியில் தட்டச்சும் போது 'ஹ'க்கு அடுத்து 'உ, இ' இது போன்ற எழுத்துக்களை சேர்க்கும் போது சரியாக வரமாட்டேன் என்கிறது. அதை மட்டும் கொஞ்சம் கவனிச்சிடுங்களேன்.

உதாரணத்திற்கு 'ஹி' என்று அடித்தால் 'ஹ்இ - ह्इ' என்று வருகிறது. 'ஹு' என்று அடிக்க முயன்றால் 'ஹ்உ - ह्उ' என்று வருகிறது.

மத்தபடி தெலு(ங்)கு எனக்கு வாசிக்க தெரியாது என்பதால் நண்பர்களிடம் கேட்டு பிறகு வந்து சொல்கிறேன்.

மீண்டும் நன்றிகள்.


பெயரில்லா |

மணிக்கு ராதா சொன்னது...

நல்ல முயற்சி, வாழ்த்துகள். முடிந்தால் தமிழ் தட்டெழுத்து (typewriter) முறையை ஒட்டிய "கீபோர்டு ட்ரைவரை" யுனிகோடில் கொண்டுவர முயற்சியுங்கள். வருங்காலத்தில் கணியில் பரவலாக தமிழ் உபயோகப்படுத்தப்படும் சமயத்தில் அது பலருக்கு உதவியாயிருக்கும்.


பெயரில்லா |

மணிக்கு கோபி சொன்னது...

அருள், நன்றி!

மதி, மலையாளம் எழுத்து மாற்றியை முடிந்தவரை விரைவாக செய்கிறேன்

பாலாஜி-பாரி, அந்தக் கொடூரத்தை எப்படி மறக்க, மாணவிகள் இறந்த தினம் என் சோதரன் பிறந்த தினம். அவர்கள் மரித்த இடம் இலக்கியம்பட்டி - இலக்கிய வளர்ச்சிக்காக புலவர்கள் தங்க, அதியமான்கள் காலத்தில் ஔவையாரால் உருவாக்கப்பட்ட கிராமம்.

நவன், இந்தி 'ஹு' ப்ரச்சனையை சரி செய்துவிட்டேன்

ராதா, தமிழ் தட்டெழுத்து முறை நல்ல யோசனை. முயற்சி செய்கிறேன்


பெயரில்லா |

மணிக்கு Seenu சொன்னது...

கோபால்,

உன் இணைய தமிழ் முயற்சிக்கு என் மனமாற்ந்த வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்...

சீனு...


பெயரில்லா |

மணிக்கு Seenu சொன்னது...

கோபால்,

உன் இணைய தமிழ் முயற்சிக்கு என் மனமாற்ந்த வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்...

சீனு...


பெயரில்லா |

மணிக்கு கோபி சொன்னது...

நன்றி சீனு,

எப்ப இந்தியா வர்றீங்க? கல்யாண ஏற்பாடு எல்லாம் எப்படி இருக்கு? போனில் விரிவா பேசுறேன்


பெயரில்லா |

மணிக்கு S Krupa Shankar சொன்னது...

भहूत अछ्छा भहूत अस्सा, कमाल कर्दिया गॉपि आप्नॆ!

सिfय वॅन्कटॅश्-कॉ इष तॅलुगु कन्वर्ट्टर पता ह्ऐ क्या? [ippadi thappu thappa Hindi-la naan adichcha Hindi kaaranga yennai adippaangalaa? ;-)]

This should definitely be a good break for Hindi and Telugu computing history.

Hats off to you!

அப்பறம் சீனு கல்யாணம் சரி, உங்களுக்கு எப்போ கல்யாணம்? ;-)


பெயரில்லா |

மணிக்கு kaNNan சொன்னது...

தகடூர் தட்டெழுத்துப் பெட்டி மிகவும் அருமை . மேலும் பல முயற்சிகள் தொடர வாழ்த்துக்கள்


பெயரில்லா |

மணிக்கு கோபி சொன்னது...

க்ருபா, மனஸ்தாபம் ஏதும் இருந்தா பேசி தீத்துக்கலாம்.

அதவிட்டு இந்த மாதிரி "கல்யாணம்" அப்பிடி இப்பிடின்னு சிக்கல்ல மாட்டிவிட்டுடாதிங்க