வலைப்பூ - மனமென்னும் மாயாஜாலம் - 1
Google Buzz Logo

சந்தேகப்படுங்க!

வாழ்க்கையே வெறுத்துப் போச்சா! என்னடா இப்படி ஒரு பொழைப்பா! நாண்டுக்கிட்டு சாகலாம்னு இருக்கா! சாகலாமா வேணாவான்னு முடிவெடுக்கறதுக்கு முன்னாடி, எதுனால அப்படித் தோனுதுன்னு பாக்கலாம்.

  1. செய்யிற வேலைக்கு மதிப்பில்ல. போதிய சம்பளம்/பதவி/வசதியில்ல ஆனா வேலைய மட்டும் வாங்கிக்கறாங்க
  2. உயிருக்குயிரா பழகுன பொண்ணு இப்ப சும்மா ப்ரண்ட்ஷிப்தான்னு கழட்டி விட்டுட்டா
  3. வீட்ல நிம்மதியில்ல என் பதவிக்கும் சம்பளத்துக்கும்தான் மரியாதை! இதெல்லாம் இல்லைன்னா ஒரு பய என்னை மதிக்கமாட்டான்
  4. கஷ்டப்பட்டு சேத்த காசு எல்லாம் போச்சி எதுக்காக வாழனும்
  5. சொந்தக் கஷ்டத்த சொல்லியழ ஆதரவா ஒரு தோள் இல்ல

இப்படி எதுவோ ஒன்னு, எதுவானாலும் ப்ரச்சனை உண்மையில அது இல்ல. உங்க மனசுதான்.

ஒரு கெட்ட விஷயம் நமக்கு நடக்கும்போது அது உண்மையில கெட்டதா அப்டின்னு யாரும் சந்தேகப்படுறதில்லை, அப்படியே அது கெட்டதுன்னு ஏத்துக்கறோம். ஆனா நல்ல விஷயம் நடக்கும் போது மட்டும் ஆயிரம் கோணத்துல அது மேல சந்தேகப்படுறோம்.

உதாரணமா, ஒருத்தன் கெட்டவன்னு யாராவது சொன்னா, நம்ம மனசுக்கு அப்படி தோனுச்சின்னா உடனே அது உண்மையான்னு விசாரிக்காம நம்பிடுறோம். ஆனா அப்படிப் பட்ட கெட்டவன் ஒரு நாள் வலிய வந்து நமக்கு ஏதாவது நல்லது செஞ்சாக்க அது உண்மையா இல்ல அவன் பின்னால ஏதாவது பிரச்சனைக்கு அடி போடுறானா, அப்படின்னு மனசுக்குள்ள ஆயிரம் சந்தேகம்.

உங்க மனசோட இந்த இயல்புதான் உங்க ப்ரச்சனை. உங்களை சந்தேகப்படாதிங்கன்னு சொல்லலை. ஒரு மாறுதலுக்காக மாத்தி சந்தேகப்படுங்கன்னு சொல்லுறேன். எப்படியா?

ஒருத்தன் உங்களை அடிச்சிட்டான், உடனே அவன் முரடன், கெட்டவன்னு முடிவு பண்ணாம, அவன் நிஜமாவே அடிக்கனும்கிற நோக்கத்தோட உங்களை அடிச்சானா இல்ல ஏதோ ஒரு வேகத்துல/கோபத்துல அப்படி பண்ணிட்டானா. அப்படியே நோக்கத்தோட அடிச்சாலும் இந்த முறை ஏதோ தவறு செஞ்சிட்டான், தவறுதல் மனித இயல்புதானே, ஒருமுறை மன்னிக்கலாம், திரும்பத் திரும்ப இப்படியே நடந்தால் அப்ப யோசிக்கலாம் அப்படின்னு முடிவெடுங்க.

கெட்டதை சந்தேகப்படுங்க! நல்லதை அப்படியே ஏத்துக்கங்க

4 கருத்து(க்கள்):

பெயரில்லா |

மணிக்கு மூக்கன் சொன்னது...

//கெட்டதை சந்தேகப்படுங்க! நல்லதை அப்படியே ஏத்துக்கங்க //

நல்லது கெட்டது எதுன்னே திரீலைங்கறேன்...:-)


பெயரில்லா |

மணிக்கு மூர்த்தி சொன்னது...

அதானே... அன்னப் பறவையைப் போல் ஏதாவது தனிச் சிறப்பு வேண்டும் எமக்கு!


பெயரில்லா |

மணிக்கு கோபி சொன்னது...

மூக்கரே,

இந்தவார முடிவில நல்லது கெட்டது எல்லாம் தெரிஞ்சி ஒரு வழியாகி முடியை பிச்சிக்கிட்டு அலையப் போறீங்க :-P

(ஹி.ஹி. சும்மா ஜோக்குங்க.. மற்றபடி வரும் நாட்களில் இந்தப் பகுதியில் பதிக்கப் போவது பல ஞானிகளின் கருத்து/பயிற்சிகளிலிருந்து காப்பி அடிக்கப்பட்டது)


பெயரில்லா |

மணிக்கு பாஸிடிவ் ராமா. சொன்னது...

இந்த உலகில் எல்லாம் மாயை. ஒருவனுக்கு நல்லதாய் படுவது மற்றவனுக்கு தீதாயும் இப்படி மாறி மாறி அமைவதினால்..எல்லாமே மாயை தான் .என்ன? நான் சொல்வது உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.