வலைப்பூ - ஊர்வலம் - 3
ஸ்ரீசைலம் பாதாள கங்கை
ஸ்ரீசைலம் அணைக்கட்டு மற்றவைகளிலிருந்த வித்யாசமானது. எவ்வாறெனில் இந்த நீர்த்தேக்கத்தில் நீர் தேங்கியிருப்பதைப் பார்க்க மக்கள் வருவது மலைமேலிருந்து கீழிறங்கி (சுமார் 650 அடிகள்) பாதாள கங்கை என்ற இடத்திற்கு
ஆம்! ஊர் மலை மேலே உள்ளது, அணைக்கட்டு மலையடிவாரத்தில்.
சுற்றிலும் இயற்கை வளம் கொழிக்கும் காட்சிகள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை எங்கெங்கு காணினும் தண்ணீர்! தண்ணீர்!
அணைக்கட்டினை சுற்றிப்பார்க்க, பாதாள கங்கையிலிருந்து விசைப்படகு சவாரியை ஆந்திர அரசாங்கமே ஏற்பாடு செய்துள்ளது. ரோப் கார் (இதுக்கு தமிழ்ல என்னங்க?) வடிவமைத்து வருகிறார்கள் இன்னும் சில மாதங்களில் தயாராகிவிடும்.
இங்கு ஊருக்குள் உள்ள சில கடைகளில் மரத்தாலான பொம்மைப் பாம்புகள் விற்கிறார்கள், அவை நெளிவதைப் பார்த்தால் நிஜமான பாம்புகள் பொலவே (பயமாக) இருக்கிறது
இங்குள்ள சிவன் கோவில் இந்துக்களின் முக்கிய சிவஸ்தலங்களுள் ஒன்று
3 கருத்து(க்கள்):
மணிக்கு நவன் பகவதி சொன்னது...
ஊர்வலம் ஜோரா போகுது போலிருக்கு.
அருமையா எழுதிட்டிருக்கீங்க கோபி. நான் பார்க்காத எடத்துக்கெல்லாம் ஊர்வலமா கூட்டிட்டு போய் காட்டுறதுக்கு நன்றி. தொடருங்கள்.
மணிக்கு அன்பு சொன்னது...
என்ன கோபி, இதுவரை தண்ணியில்ல... தண்ணி லாரின்னே கதை/ஜோக்/கட்டுரை/செய்தின்னே படித்த எங்களுக்கு தினம் தண்ணி காட்டனும்னு முடிவோட இருக்கிறீங்க போலிருக்கு, பிரமாதம்... தொடர்ந்து செய்யுங்கள்.
ரோப் கார் (இதுக்கு தமிழ்ல என்னங்க?) - இழுவை வண்டி!?
மணிக்கு கோபி சொன்னது...
பெரிய தண்ணி பார்ட்டி போல இருக்குன்னு என்னைப் பத்தி யாரும் நெனக்காம இருந்தா சரி
நீங்க சொல்லுங்க