எப்படியாச்சி - 2
Google Buzz Logo

ஒருமுறை ஒரு பயங்கரமான விமான விபத்து. புலனாய்வு அதிகாரிகள் வந்து பார்க்கும்போது ஒரே ஒரு சிம்பன்சி குரங்கு மட்டும் உயிரோட இருந்துச்சி. அதை காப்பாத்தி கூட்டிப் போகும்போது அந்த குரங்கு பேச ஆரம்பிச்சது. புலனாய்வு அதிகாரிகள் ஆச்சர்யமாகி அது கிட்ட நடந்ததப் பத்தி விசாரிக்க ஆரம்பிச்சாங்க

அ: விமானத்துல ஏறினதும் பயனிகள் என்ன பண்ணாங்க
கு: எல்லாரும் சீட் பெல்ட் போட்டாங்க
அ: பணிப்பெண்கள் ?
கு: எல்லாருக்கும் வணக்கம் சொல்லிகிட்டிருந்தாங்க
அ: விமானிகள் ?
கு: முன்னாடி உக்காந்து எல்லாம் சரியா வேல செய்யுதான்னு பாத்துகிட்டிருந்தாங்க
அ: நீ ?
கு: ஜனங்களையெல்லாம் வேடிக்கை பாத்துகிட்டிருந்தேன்
அ: அப்றம் என்ன நடந்தது
கு: பயனிகள் எல்லாம் சாப்ட்டுகிட்டிருந்தாங்க
அ: பணிப்பெண்கள் ?
கு: சாப்பாடு பரிமாறிகிட்டிருந்தாங்க
அ: விமானிகள் ?
கு: அறிவிப்பெல்லாம் முடிஞ்சி விமானத்தை ஓட்ட ஆரம்பிச்சாங்க
அ: நீ ?
கு: வாழைப்பழம் சாப்பிட்டுட்டு தோலையெல்லாம் தூக்கி வீசிக்கிட்டிருந்தேன்
அ: அப்றம் என்ன நடந்தது
கு: பயனிகள் எல்லாம் தூங்க ஆரம்பிச்சாங்க
அ: பணிப்பெண்கள் ?
கு: மேக்கப் போட்டுக்கிட்டிருந்தாங்க
அ: விமானிகள் ?
கு: விமானத்தை ஓட்டிக்கிட்டு இருந்தாங்க
அ: நீ ?
கு: சும்மாதான் இருந்தேன். ரொம்ப போர் அடிச்சது
அ: விபத்து நடக்கறத்துக்கு முன்னால என்ன நடந்தது
கு: ஜனங்கள்ளாம் தூங்கினு இருந்தாங்க
அ: பணிப்பெண்கள் ?
கு: எல்லாரும் பயனிகளுக்கு தேவையான தலையனை போர்வையை கொடுத்துகிட்டிருந்தாங்க. ரெண்டு பேரு மட்டும் காணோம். காக்பிட்ல போயி பாத்தா விமானிகள் அறையில அவங்களுக்கு முத்தம் குடுத்துகினு இருந்தாங்க
அ: விமானிகள் ?
கு: அவங்க ரெண்டு பேருக்கும் முத்தம் குடுத்துகினு இருந்தாங்க
( sheakuக்கு வருத்தமளிப்பதாக கூறியதால் மாற்றப்பட்டது)
அ: நீ ?
கு: விமானத்தை ஓட்டிக்குனு இருந்தேன்

3 கருத்து(க்கள்):

பெயரில்லா |

மணிக்கு sheaku சொன்னது...

விமான பணிப் பெண்கள் அனைவரையும் கொச்சை படுத்துதாக இருப்பது
வருத்தத்தை அ ளிக்கிறது

ஜோக் சுமார்தான்


பெயரில்லா |

மணிக்கு கோபி சொன்னது...

யாரையும் கொச்சைப்படுத்துவது எனது நோக்கமல்ல.

எவர் மனதேனும் புன்பட்டிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்


பெயரில்லா |

மணிக்கு karthik சொன்னது...

Tell me, what they were really doing?