உலகத்துல இதெல்லாம் சகஜமப்பா
ஒருமுறை ஐக்கிய நாடுகள் சபை ஒரு கருத்துக்கணிப்பு நடத்துச்சி
"மற்ற உலக நாடுகளில் ஏற்படுள்ள உணவுப் பற்றாகுறையை சமாளிக்க தேவையான தீர்வுகளைப்பற்றி உங்கள் நேர்மையான கருத்துக்களை தயவுசெய்து தெரிவிக்கவும்" ன்னு ஒரு சுற்றறிக்கையை எல்லா நாட்டு மக்களுக்கும் அனுப்புனாங்க
யார்கிட்டயிருந்தும் பதில் வரலை. என்னடா விஷயம்னு விசாரிச்சி பாத்தா
ஆப்ரிக்கால ஜனங்களுக்கு உணவுன்னா என்னனு தெரியல.
மேற்கு ஐரோப்பால ஜனங்களுக்கு பற்றாகுறைன்னா என்னனு தெரியல.
கிழக்கு ஐரோப்பால ஜனங்களுக்கு கருத்துன்னா என்னனு தெரியல.
மத்திய கிழக்கு நாடுகள்ல ஜனங்களுக்கு தீர்வுன்னா என்னனு தெரியல.
ஆசியால ஜனங்களுக்கு நேர்மைன்னா என்னனு தெரியல.
தென் அமெரிக்கால ஜனங்களுக்கு தயவுசெய்துன்னா என்னனு தெரியல.
அமெரிக்கால ஜனங்களுக்கு மற்ற உலக நாடுகள்னா என்னனு தெரியல.
(அதெப்படி பொத்தாம் பொதுவா ஒரு கண்டத்தை சேர்ந்த ஜனங்களை குறை சொல்லலாம்னு சண்டைக்கு யாரும் வராதீங்கப்பா)
2 கருத்து(க்கள்):
மணிக்கு அன்பு சொன்னது...
சண்டைக்கு வந்தா கருத்துச் சுதந்திரம் போச்சுன்னு கொடிபிடிப்பீங்க... ஜமாய்ங்க.
மணிக்கு கோபி சொன்னது...
கொடி பிடிச்சா கிழக்கு ஐரோப்பா ஜனங்க வருவாங்களான்னு தெரியலை :-P
நீங்க சொல்லுங்க