வலைப்பூ - மனமென்னும் மாயாஜாலம் - 6
Google Buzz Logo

ப்ரச்சனை

உங்க ப்ரச்சனைக்கு வருவோம். எது உங்க ப்ரச்சனை?

1) வேலை பளு
2) காதல் தோல்வி
3) சுயபட்சாதாபம்
4) பணம் இழப்பு
5) துனையில்லை

வேலை பளுவா? கொஞ்சம் கொறைவா வேல செஞ்சா ஒன்னும் போகாது, (பதவி/சம்பள உயர்வு, போனஸ் எல்லாம் கொறையும் பரவாயில்லை வாழத்தான் வேலை! வேலைக்கு வாழ்வில்லை)

காதல் தோல்வியா? உண்மையில வருத்தப்படவேண்டியது நீங்க இல்ல ஏன்னா உங்களை விரும்பாதவரைத்தான் நீங்க இழக்கப் போறீங்க. ஆனா அவுங்க? உயிருக்குயிரா நேசிச்ச உங்களை இல்ல இழக்க போறாங்க.

உங்களை யாரும் மதிக்கலையா? நீங்களே இப்படி சொன்னா எப்படி, உங்க பதவிக்கும் பணத்துக்கு ஆசப்பட்டா இவ்வளவு தூரம் படிக்கவச்சி ஆளக்கினாங்க? தாலி கட்டின ஒரே காரணத்துக்காக 20 வருஷத்துக்கும் மேல வசிச்ச வீடு, அப்பா அம்மா இவுங்களையெல்லாம் விட்டுட்டு உங்க மனைவி உங்களோட வந்தது கேவலம் பணத்துக்கும் பதவிக்கும்னா நெனக்கிறீங்க ?

பணம் போச்சா? அப்படின்னா உங்களால அவ்வளவு பணத்த திரும்ப சேக்கவே முடியாதா என்ன? முன் ஒரு முறை பணப் ப்ரச்சனை வந்தப்போ எவ்வளவு திறமையா சமாளிச்சிங்க! அந்த திறமை என்னாச்சி?

உங்களுக்கு யாருமே இல்லையா? நீங்க நெனக்கறது சரிதானா பாருங்க ? நம்ம ஒவ்வொருத்தருக்கும் உயிரயே விட தயாரா ஒருத்தர், ஆபத்துன்னா காப்பாத்த பத்து பேர், சிரிச்சா சிரிக்கவும், அழுதா அழவும் ஐம்பது பேர், நாம் மறைந்தால் வருத்தப்பட நூறு பேராவது இருக்காங்கன்னு ஒரு புள்ளி விவரத்துல சொல்லியிருக்கு. நல்லா தேடிப்பாருங்க, நாங்கல்லாம் இருக்கோமில்ல?

வாழத்தான் நமக்கு விதிக்கப்பட்டுள்ளது வாழ்வை என்று, எப்படி முடிப்பது என்பது நம் கையிலில்லை

நீங்க நெனச்சாலும் நூறு வருசத்துக்கு மேல வாழறது ரொம்ப கஷ்டம். அதனால கொஞ்ச நாள் வாழ்ந்து பாருங்களேன்

3 கருத்து(க்கள்):

பெயரில்லா |

மணிக்கு KVR சொன்னது...

//காதல் தோல்வியா? உண்மையில வருத்தப்படவேண்டியது நீங்க இல்ல ஏன்னா உங்களை விரும்பாதவரைத்தான் நீங்க இழக்கப் போறீங்க. ஆனா அவுங்க? உயிருக்குயிரா நேசிச்ச உங்களை இல்ல இழக்க போறாங்க.//

கலக்கல்ஸ்


பெயரில்லா |

மணிக்கு Chandravathanaa சொன்னது...

//காதல் தோல்வியா? உண்மையில வருத்தப்படவேண்டியது நீங்க இல்ல ஏன்னா உங்களை விரும்பாதவரைத்தான் நீங்க இழக்கப் போறீங்க. ஆனா அவுங்க? உயிருக்குயிரா நேசிச்ச உங்களை இல்ல இழக்க போறாங்க.//

mmm.... nalla karuththu


பெயரில்லா |

மணிக்கு செல்வராஜ் சொன்னது...

கோபி, உங்களுடைய "மனமென்னும்..." பதிவுகள் நன்றாக இருக்கின்றன. குறிப்பாய் இது (6). அனாவசியமாய்ப் பிரச்சினைகள் குறித்து மாய்ந்து போய் விடவேண்டியது இல்லை என்பதை எளிமையாய்ச் சொல்லி இருக்கிறீர்கள்.