வலைப்பூ - ஊர்வலம் - 2
Google Buzz Logo

நாகார்ஜுன சாகர்




பொதுவாக அணைக்கட்டு என்பது இரு மலைகளுக்கு இடையில் நீர்வீழ்ச்சியிலிருந்து சற்று தொலைவில் ஆர்ப்பரித்து வரும் நீர் சமாதானமாய் தேங்க தயாராகும் இடத்தில் கட்டப்படும்.



நாகர்ஜுன சாகர் இந்த வகை அணைக்கட்டுகளிலிருந்து சற்றே மாறுபட்டும் நீர்வீழ்ச்சியின் வெகு அருகிலேயே கட்டப்பட்டுள்ளது.




நீர்வீழ்ச்சிக்கு அருகில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டாலும் நீர்வீழ்ச்சிக்கு அருகே முதலைகள் உலாவுவதை தொலைவிலிருந்தே பார்க்க முடிவதால் வாழ்வின் மேல் ஆசை கொண்டு மேற்கொண்டு செல்லவில்லை





சாகர் என்று ஏன் சொல்கிறார்கள் என அங்கு சென்ற பிறகே தெரிந்தது. அப்பப்பா! எவ்வளவு பெரிய நீர்ப்பரப்பு! நாங்கள் சென்ற போது அணை ஏறகுறைய நிரம்பியிருந்தது. அங்கிருந்த அரசு ஊழியரை விசாரித்ததில் ஆண்டு முழுவதுமே தண்ணீர் ஓரளவு நிரம்பியே இருக்கும் என சுந்தரத் தெலுங்கில் செப்பினார்

(மேட்டூர் அணையின் பதினாறு கதவுகளைத் தாண்டி உபரி நீரை வெளியேற்றும் காட்சியை மிகச்சிறுவனாய் இருக்கையில் பார்த்த நினைவு... ஹும்....)




பசுமையான இந்த இடத்தைப் பார்த்த பிறகு ஆந்திரத்தை ஏன் வறன்ட மாநிலம் என்கிறார்கள் எனத் தோன்றிற்று (பிறகு அங்கிருந்து ஹைதராபாத் வரும் வழியெல்லாம் பார்த்ததும் அந்த சந்தேகம் விலகியது)

5 கருத்து(க்கள்):

பெயரில்லா |

மணிக்கு அன்பு சொன்னது...

வாவ்... அருமையான ஊர்வலமாய் வருகிறது. அதுவும் ஒரே அருவி, நீர்வீழ்ச்சி என்றே செல்கிறது. இரண்டுமே நான்பார்க்காத ஒன்று -விளக்கங்களுக்கும், படங்களுக்கும் நன்றி.

(கோபி... காதை பக்கத்துல கொண்டுவாங்க ஒன்னு சொல்றேன்: அடுத்தவருடம் கல்யாணம்னு சொன்ன மாதிரி வேற இருந்துச்சு, எதாவது தமிழ்தெரிந்த பெண் வந்து திருத்துவதுக்குள்ளார நானே சொல்லிடுறேன், அணை - அதாவது இழுத்து/அழுத்தி.... ஹாங் அதேதான்.:)


பெயரில்லா |

மணிக்கு கோபி சொன்னது...

அணைச்சிட்டேங்க அன்பு

அன்பார்ந்த தமிழ்ச் சனங்களே!

இதன் மூலம் நான் சொல்வது என்னவென்றால், நான் 'ன'க்கும் 'ண'க்கு வித்யாசம் தெரியாமல் வளர்ந்திருப்பது தமிழின் தனிச்சிறப்பே ஒழிய எனது தமிழ் புலமை அல்ல என்று கிஞ்சித்தும் சந்தேகமின்றி விளங்குகிறது என்பதே!

(யாராவது சோடா குடுங்கப்பா)


பெயரில்லா |

மணிக்கு அன்பு சொன்னது...

கோபி சார்... தமிழ் மட்டுமே தெரிந்த எனக்கே இது அணை சம்பந்தப்பட்ட விஷயமானதால்தான் கண்ணிலும், மனதிலும் பட்டது. உங்களைப்போன்ற தமிழ்/தெலுங்கு/மலையாளம்/ஹிந்தி/இன்னபிற மொழிகள் தெரிந்தவர்களுக்கு இது ஒரு பிரச்சினையே அல்ல, சும்மா நகைச்சுவைக்காகத்தான் சுட்டிக்காட்டினேன்.

சரி மீதியிருக்கிற சோடாவையாவது இங்க கொடுங்க...


பெயரில்லா |

மணிக்கு கோபி சொன்னது...

அன்பு,

ஐயைய்யோ! நானும் உங்க கேஸ் தானுங்க. ஹிந்தி மலையாளம் எல்லாம் என் நண்பர்களுக்குத்தான் தெரியும். தெலுங்கே இப்பத்தான் தத்தித் தத்தி கத்துக்கறேன்.

(கத்துக்குடுக்கறது யாருன்னு கேக்காதீங்க. அப்றம் எங்க வீட்ல ப்ரச்சனையாயிடும்)


பெயரில்லா |

மணிக்கு அன்பு சொன்னது...

சரிலு... சரிலு... கோபிகாரு புரியுது...