வலைப்பூ - மேலாண்மை
Google Buzz Logo

ஒரு மேலாண்மைக் கல்லூரியின் நுழைவுத் தேர்விலே கேட்டப்பட்ட கேள்வி:

ஒரு பெரிய ஆற்றின் நடுவில் துடுப்புப் படகில், நீங்கள், உங்கள் நண்பர், உங்கள் தாய் மற்றும் உங்கள் மனைவி/கணவர் எல்லோரும் இயற்கையை ரசித்தபடி சென்றுகொண்டிருக்கிறீர்கள். திடீரென்று ஆற்று வெள்ளம் அதிகரித்து படகு அதில் கவிழ்ந்து விடுகிறது. தண்ணீரில் விழுந்து தத்தளிப்போரில் நண்பர்,தாய்,மனைவி/கணவர் யாருக்கும் நீந்தத் தெரியாது உங்களுக்கு மட்டுமே நீந்தத் தெரியும். ஆனால் கரைக்கும் உங்களுக்குமான தூரத்தைப் பார்த்தால் உங்களோடு யாரேனும் ஒருவரை மட்டுமே நீங்கள் காப்பாற்ற முடியும்.

இத்தகைய சூழ்நிலையில் நீங்கள் யாரைக் காப்பாற்ற விரும்புவீர்கள்? ஏன்?

உங்கள் பதிலை பின்னூட்டத்தில் பதியுங்கள்

அந்த மேலாண்மைக் கல்லூரி எதிர்பார்த்த பதிலை சில மணித்துளிகளில் பின்னூட்டத்தில் பதிக்கிறேன்

(என்ன? பதிலை இப்பவே சொல்லனுமா ? சினிமால மட்டும் டாக்டருங்க கண்ணாடிய தொடச்சிகிட்டு "எதையும் 24 மணி நேரத்துக்கப்றம் தான் சொல்ல முடியும்"னு சொன்னா ஏத்துக்கறீங்க? அட கொஞ்ச நேரம் பொறுங்க! )

13 கருத்து(க்கள்):

பெயரில்லா |

மணிக்கு அன்பு சொன்னது...

இது மேலாண்மை சம்பந்தப்பட்டதாலும், மனசாட்சிக்கும்/மனைவிக்கும் பயம் என்பதாலும் 'சாய்ஸில்' விடப்படுகிறது...


பெயரில்லா |

மணிக்கு வீரமணி இளங்கோ சொன்னது...

கண்டிப்பா மனைவிதான் கோபி...
ஹிஹி..எனக்கு இப்பதான் கல்யாணம் ஆச்சு!!!


பெயரில்லா |

மணிக்கு Mayavarathaan சொன்னது...

Ofcourse WIFE..because a wife can become a mother (to a child) and a friend (to me!)...


பெயரில்லா |

மணிக்கு காசி சொன்னது...

'உன்முடிவைச் சொல், காரணத்தைச் சொல்லாதே' என்று ஒரு ஞானி(?) சொல்லியிருக்கிறார். ஆகவே 'மனிவி' பீரியட்.


பெயரில்லா |

மணிக்கு காசி சொன்னது...

'மனிவி'='மனைவி' :-)


பெயரில்லா |

மணிக்கு யோசிப்பவர் சொன்னது...

எனக்கு இன்னும் கல்யாணம் அகலை. இருந்தாலும்,
நான் இதை சாய்சில் விடுகிறேன்.


பெயரில்லா |

மணிக்கு BALA சொன்னது...

யாரைக் காப்பாற்றுவது என்பது (அவர்கள் முன்னர் பல காலம் உங்களிடம் எப்படி இருந்திருக்கிறார்கள் என்பதை வைத்து)நீங்கள் யாரை அதிகம் மதிக்கிறீர்கள் அல்லது நேசிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்த விஷயம் என நான் கருதுகிறேன்!


பெயரில்லா |

மணிக்கு பாண்டி சொன்னது...

அடடா!.. இதுக்கு படிச்சது மறந்து போச்சே!!! எது சரியான பதிலோ அதுதான் என்னோட பதில். ;)


பெயரில்லா |

மணிக்கு ரா.சுப்புலட்சுமி சொன்னது...

தாயைத்தான் காப்பாற்றுவேன். கணவன்/மனைவி அல்லது நண்பனை இழந்தாலும் காலப்போக்கில் வேறொரு "க/ம (அ) ந" கிடைக்கலாம். ஆனால், தாய் போல உறவுகள் பின் கிடைத்தாலும் அவை யாவும் "போல"த்தான் - தாயாய் யாரும் கிடைக்க மாட்டார்கள்.


பெயரில்லா |

மணிக்கு மூர்த்தி சொன்னது...

நான் நடுநிலையோடு இருந்து சிந்தித்துப் பார்க்கிறேன். எனக்கூ என் தாய் முக்கியம். ஆனால் அதே சமயம் அவர் வாழ்வை அனுபவித்தவர். தன் கண்ணால் தன் மகவு நன்றாக வாழ்வதைக் கண்ணுற்றவர். தன் வாழ்வின் பெரும்பகுதிகளை அனுபவித்தவர். அடுத்து நண்பன். உயிர்கொடுப்பான் தோழன் என்பார்கள். நான் என் நண்பனுக்காக என்னுயிரைக் கொடுக்காவிட்டாலும் அவன் உயிரை அவனுக்கே திருப்பித்தரும் வல்லமை என்னிடத்தில் உண்டு.(தப்பிப் பிழைத்து வந்து மீண்டும் கடன் கேட்கமாட்டான் என்று என்ன நிச்சயம்?!) சற்றே சிந்திக்கிறேன். என் உடலில் பாதியான என் மனைவி பக்கத்தில். எங்கே என் இடது பாதி உடம்பையா விட்டுவிட்டு என் நண்பனைக் காப்பாற்றச் சொல்கிறீர்கள்?(அதுமட்டுமில்ல பீரோ சாவி அவ இடுப்புல இருக்குதுங்க... கண்டிப்பா காப்பாத்தியே ஆகனும்!,,ஹிஹிஹி)


பெயரில்லா |

மணிக்கு அன்பு சொன்னது...

சரி சரி.. இப்பவாது சொல்லுங்க, 24 மணிநேரத்துக்கு மேலேயே ஆயாச்சு.


பெயரில்லா |

மணிக்கு கோபி சொன்னது...

அன்பார்ந்த தமிழ்ச் சனங்களே,

பெருவாரியான வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெற்றது மனைவி என்றாலும் ஒரு சிறந்த மேலாளனிடமிருந்து அந்த மேலாண்மைக் கல்லூரி எதிர்பார்த்த பதில் "யார் (கரைக்கு நீந்தும் வழியில்) அருகில் இருக்கிறாரோ அவரைக் காப்பாற்றுவேன்" என்பதே

(ஏன்னு கேட்டா நமக்கு பிடிச்சவங்களை காப்பாத்தப் போய் நாம முழுகிடக் கூடாதுன்னு காரணம் சொல்றங்க)


பெயரில்லா |

மணிக்கு BALA சொன்னது...

இதுக்கு பேர் தான்யா லொள்ளு! மண்டை காய வைக்கிற பதில்னா இதான்பா! Anyway, thanks, Gopi. Pl. visit my blog and give your comments when you have the time.
என்றென்றும் அன்புடன்
பாலா