வலைப்பூ - மனமென்னும் மாயாஜாலம் - 2
கடவுளே நீ எங்க இருக்க
நம்ம எல்லாருக்கும், எல்லா மதத்தினருக்கும் ஒரு தீராத சந்தேகம்! கடவுள் இருக்கிறாரா? எங்கே இருக்கிறார்?
இதுக்கு ஒரு சின்ன கதை
கடவுள் இந்த உலகத்தையும் மனிதனையும் இன்ன பிற ஜீவராசிகளையும் படைத்தார் என எல்லா மதநூல்களும் சொல்கின்றன. அப்படி கடவுள் மனிதனைப் படைத்த போது அவனுக்கு ஒரு வரம் கொடுத்தாரு. "நான் இருக்குமிடத்தினை மனதில் நினைத்து அழைத்தால் வருவேன்". அப்படின்னாரு. நம்பாளு என்னா பண்ணான், ஆ ஊன்னா கடவுளை கூப்பிட ஆரம்பிச்சான். உச்சா போக முடியலையா? கடவுள கூப்பிடு கக்கா போக முடியலையா? கடவுளக் கூப்பிடு.
கடவுளும் கஷ்டம் பாக்காம அவன் கூப்பிட்டப்பல்லாம் வந்துகிட்டிருந்தாரு. அப்படியும் விட்டானா நம்ப ஆளு? கூப்பிட்டா வர்றத்துக்கு கொஞ்சம் நேரமானா கூட திட்ட ஆரம்பிச்சான்.
பார்த்தாரு கடவுள், இவனால கண்டுபிடிக்கவே முடியாத இடத்துல பொய் தங்கிட்டாத்தான் நிம்மதின்னு யோசிச்சாரு. மனுஷன் மனசுதான் அவன் நினச்சிப் பாக்காத இடம்னு முடிவு பண்ணி அங்க போய் தங்கிட்டாரு.
மனுஷன் அதுக்கப்றம் கடவுள் எங்க இருக்காருன்னு நெனச்சாலும் தப்பாவே ஆச்சி. அவன் தான் மனசப்பத்தி நெனச்சிப் பாக்றதே இல்லையே. இப்பவும் மனசுக்குள்ள இருக்குற கடவுள கண்டுபிடிச்சி கூப்பிட்டவங்களுக்கு அவர் வந்து உதவுறாருன்னு ஒரு பேச்சி இருக்கு
உங்க மனசுல இருக்குற கடவுளப்பத்தி எப்பவாவது நெனச்சதுண்டா?
என்னது கடவுள் உங்க மனசுல இருக்காரான்னு சந்தேகமா இருக்கா?
நல்லதை சந்தேகப்படாதீங்க! கெட்டதை சந்தேகப்படுங்க !
உதறித் தள்ளுங்க
எப்பவாச்சும் ரொம்ப மன அழுத்ததோட இருக்கும் போது அதிலிருந்து விடுபட ஒரு எளிய பயிற்சி
உங்களை தனிமை படுத்திக் கொள்ளுங்கள்
மீனவன் வலை வீசுவதைப் பாத்திருக்கீங்களா? "ஹூம்" என்றபடி இரு கைகளையும் பலம் கொண்ட மட்டும் அதைப் போல காற்றில் வீசுங்க (எது மேலயும் இடிச்சிடாம பாத்துக்கங்க கை கழன்டு போற மாதிரி இல்லாம ஒரளவு மிதமான வேகத்தோட வீசுங்க)
இப்படி வீசும் போது உங்களை விட்டு இரு விஷயங்கள் வெளியேறுவதாக கற்பனை செய்யுங்க. ஒன்னு ஈகோ என்னும் ஆணவம், இன்னொன்னு உங்க மன அழுத்தம். இப்படி மூனு-நாலு முறை செய்யுங்க
சரி இப்ப எல்லாம் உங்களை விட்டு மன அழுத்தமும் ஈகோவும் போயிடுச்சி இல்லயா? ஈகோ இல்லாம எல்லாரோடவும் போய் பழகுங்க
என்ன நம்பமுடியலையா? செஞ்சி பாருங்க!
நல்லதை சந்தேகப்படாதீங்க! கெட்டதை சந்தேகப்படுங்க !
4 கருத்து(க்கள்):
மணிக்கு அன்பு சொன்னது...
நல்லதை சந்தேகப்படாதீங்க! கெட்டதை சந்தேகப்படுங்க!ன்னு திரும்ப திரும்ப சொல்லிட்டிருக்கிறீங்க, இருந்தாலும் ஒங்கள சந்தேகப்படறதா, வேணாவா-ன்னு தெரியல.
நீங்க ஏதும் மனோதத்துவம், தன்முனைப்பு பயிற்சி கொடுத்திருக்கீன்றீர்களா, தொழில்முறையில்? அதே நடை, அதே சுருதி, அதே விஷயம்... கலக்குங்கள் பல்துறைவித்தகரே.
மணிக்கு கோபி சொன்னது...
அன்பு,
ஹி. ஹி. நல்லதை சந்தேகப்படாதீங்க! கெட்டதை சந்தேகப்படுங்க!ன்னு சொல்லும்போதே உங்களுக்கு தெரிந்திருக்குமே என் மேல சந்தேகப்படலாமா வேணாவான்னு :-P
வலைப்பூ - மனமென்னும் மாயாஜாலம் - 1 ல் சொன்ன சில காரணங்களுக்காக மனமுடைந்த மென்பொருள்துறை நண்பர்கள் சிலரின் முடிவு வேறெவர்க்கும் வரக்கூடாதென்று பதைக்கும் உள்ளத்தின் வெளிப்பாடே வலைப்பூ - மனமென்னும் மாயாஜாலம் பகுதி
மணிக்கு அன்பு சொன்னது...
என்ன கோபி, புரியாதமாதிரி கேட்கிறீங்க... சந்தேகமே அங்கதான... அதாவது நீங்களாயிருப்பதால்தானே!?
மணிக்கு கோபி சொன்னது...
(நாயகன் ஸ்டைலில் படிக்கவும்)
அன்பு: நீங்க நல்லவரா? கெட்டவரா?
நான்: ஆங்..ஓ.. ஹும்ம்... (அட அழுவராராம்) தெரியலையேப்பா ....
(டிங் டிடிடிங்..... தென்பாண்டி சீமையில ..... டிங் டிடிடிங்..... பின்னணியில்
பேத்தோஸ் ஒலிக்கிறது)
நீங்க சொல்லுங்க