வலைப்பூ - சோதிடம் + வானவியல் + ஒரு கேள்வி
Google Buzz Logo

வானவியலில் உள்ள அத்தனை கிரகங்களும் சோதிடத்திலும் பயன்படுத்தப்படுகின்றன. ஆச்சர்யப்படவைக்கும் உண்மை என்னவென்றால், அவற்றின் சுற்றுக் காலங்களும் சோதிடத்தில் சரியாக பயன்படுத்துவதே

உதாரணத்துக்கு,

பன்னிரு ராசிகளையும் வியாழன் (குரு) ஒருமுறை கடக்க எடுத்துக் கொள்ளும் காலம் சோதிடத்தில் பன்னிரு வருடங்கள் வானவியல் கண்டுபிடித்தது 11 வருடமும் 314.96 நாட்களும்.

சூரியன் பன்னிரு ராசிகளையும் கடக்க எடுத்துக் கொள்ளும் கால அளவு 1 வருடம். சூரியனை ஒருமுறை சுற்றி முடிக்க பூமி 1 வருடம் எடுத்துக் கொள்கிறது.

சந்திரன் பன்னிரு ராசிகளையும் கடக்க ஒரு மாதம் எடுத்துக் கொள்கிறது. ஒருமுறை சுற்றி முடிக்க பூமி 1 வருடம் எடுத்துக் கொள்கிறது.

அதே போல ஒவ்வொரு மாத்திற்கு ஒரு சிறப்பு நட்சத்திரமுண்டு,

தைப்பூசம், மாசி மகம், ஆவனி அவிட்டம், இப்படி, மாதத்தின் சிறப்பு நட்சத்திரங்கள் வரும் நாட்கள் அனைத்தும் பௌர்னமி தினங்களே! இந்த ஒற்றுமை ஆச்சர்யமூட்டுகிறது

வானவியல் நிகழ்வுகளின் போது பாதிக்கப்படும் கிரகங்கள் சோதிடத்திலும் அதன்படியே எழுதப்பட்டிருக்கின்றன. (உ.ம் ஷூ மேக்கர்/லேவியால் வியாழன் கிரகம் பாதிக்கப் பட்ட போது சோதிடத்தில் குருவின் ஆதிக்கத்திலிருந்தவர்களுக்கு தீய பலனகள் சொல்லப்பட்டது (நடந்ததா என்பது வேறு விஷயம்)

ப்ருஹுத் ஜாதகா, ப்ருஹுத் சம்ஹிதா போன்ற சோதிடக்கலை சம்பந்தப்பட்ட நூல்களில் பூகம்பம், வறட்சி, போர், மழை போன்றவை வர சாத்தியமான கிரக அமைப்புகள் பற்றியெல்லாம் விவாதிக்கப்பட்டுள்ளது

இது போலவே சோதிடத்திலும் வானவியலிலும் உள்ள ஒற்றுமைகளைக் கூற இன்னும் பல உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்

சோதிடம் உண்மையா? பொய்யா? சோதிடர்கள் பொய்யர்களா? இதெல்லாம் எனக்குள் எழும் கேள்விகளல்ல

ட்ரில்லியனுக்கு அப்பால் ஒரு எண் வந்தால் அதை என்ன பெயரிட்டு அழைக்கலாம் என்று தெரியாதவர்கள் சில வருடங்களுக்கு முன் கண்டுபிடித்த வானத்து நட்சத்திரங்கள், ராசி மண்டலங்கள், கிரகங்கள் அவற்றின் சூரியனைச் சுற்றும் கால அளவுகள், ஆகியவற்றைத் தொலைநோக்கி போன்ற வசதிகள் ஏதும் இல்லாத காலத்திலேயே துல்லியமாக கணக்கிட நமது சோதிட மேதைகளால் எப்படி முடிந்தது?

6 கருத்து(க்கள்):

பெயரில்லா |

மணிக்கு காசி சொன்னது...

அன்று இருந்த வசதி, கருவிகளை வைத்துக்கொண்டு இதெல்லாம் எப்படிக் கணக்கிட்டார்கள் என்பது ஆச்சரியமே. வாரம் என்பது எந்த அடிப்படையில் வருகிறது என்பது இன்னும் எனக்குப் பிடிபடவேயில்லை. அது மட்டும் செயற்கையான விஷயமாகப் படுகிறது. என்ன சொல்றீங்க?


பெயரில்லா |

மணிக்கு மூர்த்தி சொன்னது...

சிறப்பான அலசல் திரு.கோபி. இன்றைக்கு உலகில் இவ்வளவு வசதிகள் இருந்தும் மிகப்பெரிய தகு எண்..மிகச் சிறிய தகா எண் எனக் கண்டுபிடிக்க பலமுறை மண்டையை உடைக்க வேண்டி உள்ளது. வசதிகள் குறைந்த அக்காலத்திலேயே இவ்வளவு துல்லியமாக என்றால் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

பண்டைய வானவியல் ஜாஸ்திரங்கள்,ஜோதிடங்கள் எல்லாம் சூரியனை வைத்தே அதிகம் பின்னப் பட்டிருக்கும்.


பெயரில்லா |

மணிக்கு கோபி சொன்னது...

காசி,

நீங்கள் சொல்வது போல வாரம் ஏற்பட்ட காரணம் எனக்கும் புரியவில்லை. நிலவின் சஞ்சாரத்தைப் பொறுத்து ஏற்பட்ட மாதம் என்ற அலகு எதன் அடிப்படையில் நான்கு வாரமும் சில நாட்களும் எனப் பிரிக்கப்பட்டதென்பது புரியாத புதிர்!


பெயரில்லா |

மணிக்கு கண்ணன் சொன்னது...

வாரம் உருவானதற்கு பைபிளிள் ஒரு காரணம் சொல்லப்பட்டிருக்கிறது. அதன் படி கடவுள் ஆரம்பகாலத்தில் உலகையும், சொர்க்கத்தையும், நரகத்தையும் படைக்க ஆறு நாட்கள் பிடித்தனவாம், ஏழாவது நாள் அவர் ஓய்வெடுத்துக் கொண்டார். (வாரம் ஒரு நாள் விடுமுறை எனும் வழக்கம் ஏற்பட்ட காரணம் இப்பொழுது புரிகிறதா? :-) ).


பெயரில்லா |

மணிக்கு கோபி சொன்னது...

கண்ணன், கடவுள் நம்மளப் படைச்சப்புறம் 2 நாள் ஓய்வெடுத்துட்டாரு போல! :-)


பெயரில்லா |

மணிக்கு கண்ணன் சொன்னது...

ம் அதில்லை,இவங்களை படைக்கறேன்னு சொல்லி அதுக்கு அஞ்சு நாள் வேஸ்ட் பண்ணினது போதும்னு நிணைச்சிருப்பாரு ;-)