வலைப்பூ - வணக்கமுங்க
போன வாரம் பூரா தானைத்தலைவர் நவன் கலக்கிட்டிருந்தாரு. காத்தால வலைப்பூ ஆபீசுக்கு வந்து பாத்தா "இந்த வார நட்சத்திரம்" போர்டு போட்டுட்டாங்கப்பா
திடீரென்று வலைப்பூ ஆபீசை வேற சில முன்னேற்றங்களோட தமிழ்மணத்துக்கு மாற்றிட்டாங்கன்னு மீனாக்ஸ் கிட்ட இருந்து மின்னஞ்சல் வந்துச்சி.
"முக்கியம்" போர்டு போட்டு ஒரு மின்னஞ்சல் மூலமா, புது ஆபீஸ்ல என்ன பண்ணனும், எப்படி பண்ணனும்னு சொல்லியிருந்தாரு காசி.
வலைப்பூவின் இந்தவார ஆசிரியர் (அல்லது இந்தவார நட்சத்திரம்) என்று சொல்லும் போது மதி தன்னை மிகத்தெளிவு செய்து யோசித்துப் பார்த்ததில் ஆபீஸ் பாய் கோபி என்ற அளவிற்கே என் சிற்றறிவிருக்கிறது. காசி வேறு அவ்வப்போது ப்ளாஸ்க் கொடுத்து "காப்பி" வாங்கிவரச் சொல்கிறார். (இதென்ன புதுக்கதை!) நம்ம ஊர் காப்பி போல இருக்கணும் என்று வேறு சொல்கிறார்.
சிறு அறிமுகம்
ஆக இந்த வார வலைப்பூ இந்த ஆபீஸ் பாய் பார்வையில்! பிழைகளேதும் ஏற்பட்டால் சண்டைக்கு வராமல் இச்சிறுவனின் அறிவுக்கு எட்டியது அவ்வளவுதான் என்று மன்னித்து விட்டுவிடுங்கள்
எப்படியும் இந்த வார கடைசியில முடியை பிச்சிக்கிட்டு அலையப் போறீங்க, ஆரம்பிக்கும் போது கொஞ்சம் சிரிச்சிகிட்டே ஆரம்பிக்கலாம்
(பரணிலிருந்து இறக்குமதியான பழையது ஒன்று)
ஒரு கப்பல்ல உலக தீவிரவாத்தை அழிக்க, இந்திய, அமெரிக்க, ரஷிய கப்பற்படை தளபதிகள் பேசிக்கிட்டிருந்தாங்க.
அமெரிக்க தளபதி ஒரு போராளியை கூப்பிட்டு, ஓடிகிட்டிருக்க கப்பலை ஒரு சுத்து நீந்தி வரச் சொன்னாரு. அவனும் கஷ்டப்பட்டு நீந்தி மேல ஏறி வந்தான். அமெரிக்க தளபதி, எல்லாரையும் பாத்து பெருமையா, "எங்க ஆளு தைரியத்தப் பாத்தீங்களா?"ன்னாரு.
அடுத்து ரஷிய தளபதி ஒரு போராளியை கூப்பிட்டு, ஓடிகிட்டிருக்க கப்பலை மூனு சுத்து நீந்தி வரச் சொன்னாரு. அவனும் கஷ்டப்பட்டு நீந்தி மேல ஏறி வந்தான். ரஷிய தளபதி, எல்லாரையும் பாத்து பெருமையா, "எங்க ஆளு தைரியத்தப் பாத்தீங்களா?"ன்னாரு.
இப்ப இந்திய தளபதி ஒரு போராளியை கூப்பிட்டு, ஓடிகிட்டிருக்க கப்பலை அஞ்சு சுத்து நீந்தி வரச் சொன்னாரு. அதுக்கு அவன் "போய்யாங்கு! உங்கொப்பனுக்கு நான் என்ன வேலக்காரனா?" அப்படின்னான். இந்திய தளபதி, எல்லாரையும் பாத்து பெருமையா, "எங்க ஆளு தைரியத்தப் பாத்தீங்களா?"ன்னாரு.
9 கருத்து(க்கள்):
மணிக்கு நவன் பகவதி சொன்னது...
வணக்கமுங்க.
வலைப்பூ வரலாற்றில் முதன் முதலா எல்லாரும் அறிந்த நட்சத்திரமா உருவெடுத்திருக்கீங்க. தூள் கிளப்புங்க.
வலைப்பூவின் புதிய அவதாரத்திற்கும் முதல் நட்சத்திரத்துக்கும் வாழ்த்துக்கள்.
மணிக்கு அன்பு சொன்னது...
வாங்கோ...பி வாங்கோ...
நட்சத்திர அந்தஸ்துடன் வந்திருக்கும் முதல்வரே, வருக... வருக... வந்து கலக்குங்க.
மணிக்கு ஈழநாதன் சொன்னது...
வணக்கம் கோபி தமிழ்மணம் வலைப்பூ இணைப்பின் முதல் நட்சத்திர நாயகர் பெருமை உங்களுக்குக் கிடைத்துள்ளது.
இவ்வாரம் சிறக்க வாழ்த்துக்கள்
மணிக்கு கிறிஸ்டோபர் சொன்னது...
வாங்க கோபி... இந்த வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...
மணிக்கு மூர்த்தி சொன்னது...
கோபியவர்கள் சிறப்பாக படைப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. வாழ்த்துக்களும் பாராட்டும்...
மணிக்கு ராஜ்குமார் சொன்னது...
கலக்குங்க கோபி
ராஜ்குமார்
மணிக்கு Chandravathanaa சொன்னது...
வாங்கோ கோபி. அசத்துங்கோ.
நானும் உங்களைப் போல எட்டு மாதத்திலேயே பிறந்தவள்தான்:
ஒரு வித்தியாசம். அம்மா மாடிப்படிகளில் உருண்டு விட்டா.
கஸ்டம் கொடுத்துத்தான் பிறந்திருக்கிறேன்.
மணிக்கு சாகரன் சொன்னது...
அடடே... ஆரம்பித்தாகிவிட்டதா?!
வணக்கம் கோபி, வாழ்த்துக்கள்.
மணிக்கு யோசிப்பவர் சொன்னது...
அட! வந்த உடனேயே சிரிக்க வச்சுட்டீங்களே!
சிரிச்சு சிரிச்சு வந்தார் நம்ம கோபிடோய்!!!
நீங்க சொல்லுங்க