வலைப்பூ - ஊர்வலம் - 1
Google Buzz Logo

ஹொகேனக்கல் - புக்ககம் பாயும் காவிரிபிறந்த வீடான கர்னாடகத்திலிருந்து புகுந்த வீடான தமிழ்நாட்டுக்கு காவேரி வலது காலெடுத்து பொங்கிப் பாய்ந்து ஓடிவரும் இடம் தான் ஒகேனக்கல். (அரசியல்வாதிகளால் காவேரிக்கு வேறு அர்த்தம் ஆகிவிட்டதாலேயே இந்த அறிமுகம்)

நீர்வீழ்ச்சியைச் சுற்றி புகை போல நீர்ச்சாறல் தெரிப்பதனாலேயே ஹொகேனக்கல் (கன்னடத்தில் ஹொகெ என்றால் புகை) எனப் பெயர் வந்தது. நீர்வீழ்ச்சியைப் பார்த்துவிட்டு வந்த பிறகு குளிக்கும் ஆசை வரும்.ஆயில் மசாஜ் இங்க ரொம்ப பிரபலம். ஆயில் மசாஜ் செய்வதானால் அரசாங்க அனுமதி பெற்றவரிடம் செய்துகொள்ளுங்கள். காசு குறைவு என கண்டவர்களிடம் மசாஜ் செய்து அப்றம் அங்க வலிக்குது இங்க வலிக்குது அப்பிடின்னு கத்த வேண்டாம்.

நீர்வீழ்ச்சியில் குளிக்க ஆண்களுக்கும், குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் தனித்தனிப் பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
குளித்து முடித்து பசிக்கிறதா? அசைவப் பிரியரானால் வகை வகையாய் சுவையான மீன்கள் சாப்பிடலாம். சைவமானால் வரும்போதே சமைத்து எடுத்துவருவது நல்லது (ஒன்றிரண்டு சைவ ஓட்டல்கள் இருக்கின்றன ஆனால் அவ்வளவாக ருசிக்காது)சரி சாப்டாச்சா, வாங்க ஒரு சுத்து சுத்திப் பாத்துட்டு வரலாம். இங்க பாக்க வேண்டிய இடம்னா

1) தேசிய முதலைப் பண்ணை,
2) பாலம் தாண்டிப் போய் கர்னாடகப் பக்கத்தில் பார்த்தால் தெரியும் (குளிக்க முடியாத அளவிற்கு வேகம் அதிகமான) நீர்வீழ்ச்சிகளின் முழு அழகு,
3) நீர்வீழ்ச்சிக்கருகே சென்று பார்க்கும் பரிசல் பயணம் (மிக ஆபத்தானது தவறி விழுந்தால் உயிர் பிழைப்பது கடினம். நீந்தத் தெரிந்தாலும் தப்பிக்க முடியாது காரனம்: ஆழம், சுழல், முதலைகள்)

காலைல பெங்களூரிலிருந்து கிளம்பினீங்கன்னா ஒரு வழியா எல்லாம் முடிச்சப்றம் கொஞ்சம் காவேரிக் கரையில ஓய்வெடுத்துட்டு மாலைச் சூரியன் மறைந்த பிறகு பெங்களூர் திரும்பலாம் (பெங்களூரிலிருந்து சுமார் 180 கி.மீ).

புகைப்பட உரிமை உரியவர்களுக்குச் சேர்வதாக, (அனுமதி பெற அவகாசமில்லை. மன்னிக்க)

0 கருத்து(க்கள்):