வலைப்பூ - பூச்சரம் - 2
கபாலி: ஏ வந்தனோம் வந்தனோம் வந்தஜனம் குந்தனோம் அடே தம்பி சந்தானம் அள்ளி குட்றா சந்தனம்.
பக்கிரி: இன்னா மாம்ஸூ! படா குஷியா கீற போல கீது!
கபாலி: பின்ன இன்னா பக்கிரி! டெய்லி டெய்லி வர்ஸொல்லொ புச்சு புச்சா தமிளு ஆளுங்கள பாக்றனா, மன்சு சந்தோசத்ல பீலிங்ஸ் ஆய்கிதுபா
பக்கிரி: இன்னா சொல்ற நீ! கொஞ்சம் பிர்யற மாறி சொல்பா
கபாலி: நம்ப ந. உதயகுமார் (குட்டிக் கதைகள் எய்துன அதே ஆளு தாம்பா இங்கிலிபீஸ்ல Stories and Parablesன்னு கூட எய்திகீறாரு) இல்ல? அவுரு கருத்துக்கள்ல BSNLஐ வாரு வாருன்னு வாரிகீறாரு
பக்கிரி: ஓ! நம்ம தமிளு சனங்களோட எணைய பக்கம் பத்தி சொல்றியா நீயி. இப்பிடிதான் குந்தவை கொடயப் பத்தி ஒரு கதைய கூட அழகா சொல்ல ஆரம்பிச்சி அப்டியே கடக்குதுபா
கபாலி: எதுனா பெர்சனல் வேல இர்க்கும்பா. அத்த வுடு
வைகை நதிக்கரையில்...ன்னு வைகை வர்லாறு சொல்லி கீறாரு வீரமணி இளங்கோ கவுன்ச்சியா நீயி
பக்கிரி: அப்பாலிக்கா
தோழனின் தும்மல் - தூறலில் நனைந்த தோழன் துவட்டமுன் தும்ம வருகிறான்னு ஆரம்பிச்சி எயுதுறாரு நம்ம தோழரு
கபாலி: குழவில வெடிகுண்டு தேசம்ன்னு ஆந்ரேயி சொல்ற விசியத்த படிக்க சொல்ல மன்சு கஸ்டமாவுதுபா
பக்கிரி: மேட்டர் தெர்யுமா உனுக்கு? நம்ப கண்ணன் ப்லாக்கர்லேந்து புதுசா கண்ணனின் வலைமொட்டுகள்க்கு வூடு மாறிட்டாரு பா
கபாலி: அப்பிடியா மேட்டரு இராஜ.தியாகராஜனின் தமிழிலக்கியப் பக்கம்ல இலக்கியம், டிஸ்க்கி, யுனிகோட் பத்தியெல்லாம் சொல்றாரு
பக்கிரி: பினாத்தல்கள்ல நம்ப சுரேஷ் பினாத்த ஆரம்பிச்சிட்டாரு. வீரப்பனுக்கு சில இரங்கல் கவிதைகள்ல அவரு அடிக்கிற லூட்டி செம டமாசு
கபாலி: காட்சியும், கனவும், எழுத்தும் மாறி மாறி வர்துன்றாரு சுந்தரவடிவேல். அந்தரத்தில் பந்தாடுற பொம்பள செலயோட போட்டோ சூப்பரு
பக்கிரி: அறுபத்தைந்தாம் கட்டம்ல செஸ் பத்தி விவாதிக்கறாரு கண்ணன் இராமநாதன்
கபாலி: அதே மாரி பங்குச் சந்தை பொங்கு தமிழில் பங்குச் சந்தை குறிப்புகள்ன்னு சூப்பரா இஷ்டாக்கு பத்தியெல்லாம் சொல்லித் தருது தமிழ்சசி
பக்கிரி: நெற்யோ பேரு எய்துராங்க! அல்லாமே சூப்பரா கீது. அல்லாம் பட்ச்சி பாக்கனும்னாக்க டையம் கெடிக்க மாட்து.
கபாலி: கரீக்ட்டா சொன்ன பக்கிரி!
1 கருத்து(க்கள்):
மணிக்கு மூர்த்தி சொன்னது...
கொசப்பேட்டை கணக்கா கொன்னுட்டீங்க கோபி.
நீங்க சொல்லுங்க